பக்கம்:முருகன் காட்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

றுந்தொகையின் இரண்டாவது பாடல், பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்திற் காணப்படும் தருமியின் வரலாறு முதலியன பற்றிய செய்திகள் இக்கட்டுரையில் விளக்கமாக உரைக் கப்பட்டுள்ளன.

மூன்றாவது கட்டுரை நக்கீரர் காட்டும் முருகன்’ என்பதாகும். முதலாவதாகத் தொல்காப்பியம் புறத் திணியியலிற் கூறப்படும் ஆற்றுப்படையின் இலக்கணம் தெளிவுறுத்தப் பெற்றுள்ளது. அடுத்து, திருமுருகாற்றுப் படை ஆற்றுப்படை இலக்கணத்திற்கு எம்முறையில் எந்த அளவில் பொருந்தி வந்துள்ளது என்பது குறிப்பாகப் புலப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், திருமுருகாற்றுப்படையில், கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு நக்கீரால் எவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது என்பதும், பெருந்தண் கண்ணிமிலைந்த சென்னியனாகத் திருமுருகன் திறம்பட விளங்குவதும் ஆகிய செய்திகள் பேசப்பட்டுள்ளன.- முருகப் பெருமானின் சிவந்த திருவடிகளைத் தேடிச் செல்லும் தலைமை சான்ற உள்ளத்துடனும், நன்மையையே நாடிச் செல்லும் குறிக்கோளுடனும் முருகன் விரும்பி எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் சேவடி படரும் செம்மல் உள்ளத்’ தினராய் அடியவர்கள் செல்கிறார்கள்; தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறப் பெறுகின்றார்கள்.

அடுத்து மதுரையின் சிறப்புக் குறிக்கப்பெறுகின்றது. மதுரை மாநகர் பொருநர்த் தேய்த்த போரரு வாயிலாக’ விளங்குவதும், அம்மதுரையின் மேற்றிசையில் முருகன் விரும்பியுறையும் திருப்பரங்குன்று திகழ்வதும் கூறப்படு கின்றன. பின்னர் ஆறுமுகமும் பன்னிருகைகளும் எவ்வாறு விளங்குகின்றன என்பதும் அவை எச்செயல்களை ஆற்று கின்றன என்பதும் விளங்கக் கூறப்படுகின்றன. இது திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரிலே திருமுருகன் கொண்டுள்ள தோற்றப் பொலிவாகும்.

அடுத்துத் திருவாவினன்குடியில் முத்திச் செல்வத்து இருபிறப்பாளர் நியமங்களோடு ஆறுமுகப் பெருமானைப் பரவிப் போற்றுவது கூறப்படுகின்றது. குன்றுதோறும் விரும்பிக் கோயில் கொண்டுள்ள குமரக் கடவுளின் அருட் ப்ொலிவும், குன்றுவாழ் குறக்குடியினர் மைந்தரும் மகளிரு மாகச் சேர்ந்து நிகழ்த்தும் குரவைக் கூத்தும் கவினுறக் கிளத்தப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/10&oldid=585840" இலிருந்து மீள்விக்கப்பட்டது