பக்கம்:முருகன் காட்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் காட்டும் முருகன் 1 13

உமையம்மையின் திருவயிற்றினைப் புகழ்ந்துரைக்கின்றார். தோலாத முத்தமிழ் நாவா’ என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் முருகக் கடவுள் அசுரரொடு போரிடுகையில் இறந்த அவுணர்கள் சூரிய மண்டலத்தை ஊடுருவிச் சென்று வீர சுவர்க்கம் புகுந்து தேவராகித் தேவலோக இன்பத்தைத் தாமும் தவறாது துய்ப்பர் என்றும் குறிப்பிடுகின்றார்.

முத்தப் பருவப் பாடலில், கள்ளைக் குடித்த மகளிர் மயக்கத்தால் வானூர் மதியைத் தேனிறால் என்று கருதி அதனை விரும்ப, மங்கையர்பால் மாறா மையலும் மயக்கமும் கொண்ட ஆடவர் அச் சந்திரனைப் பிடித்துப் பிழியத் தொடங்கும் எல்லையில், சந்திரன் தனக்குரிய தண்டனை இது போதும் என்று கருதி நான் மகளிர் முகத்திற்கு ஒப்பென்று ஒருபோதும் கூறினேனில்லையே” எனக் குறையிரந்து விடுபட்டு மகிழ்வான் என்று கற்பனை மிகுந்த பாடலொன்றினைப் புகழ்ந்துள்ளார். அப்பாடலின்

ஒரு பகுதி வருமாறு :

துளிதுாங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும்

துகிற்கொடிகள் சோலைசெய்யத் தோரண முகப்பிற் றவழ்ந்தேறு கலைமதித்

தோற்றத்தை யறுகான்மடுத் தளிதுங்கு தேனிறா லிதுதம்மின் வம்மினென்

றழிநறா வார்ந்து நிற்கும் அங்கலார் கைகூப்ப வாடவர் பிழிந்துாற்று

மளவிலப ராதமிதெனா ஒளிதுாங்கு முகமதிக் கொப்பென்கி லேன்விடுதிர்

உயிரொன்று மெனவிடலும்.

-முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் : 5 : 7

வருகைப் பருவத்தில் ஒசைநயம் மிகுந்த பாடல்களில் முருகனை வாவெனப் புலவர் விளிக்கின்றார் :