பக்கம்:முருகன் காட்சி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முருகன் காட்சி

தன்னுடைய ஒளி சுடர்விடும் வளையலை அணிந்துள்ள பெரிய கையிலே தாங்கி, திருமுருகன் அடியார் துயர் அகல அவர்க்குப் பரிந்து பகைவர் மேற் சென்று, அவர்களைக் கொன்று குவித்த அடுகள வெற்றியைப் புகழ்ந்து பாடிக் கொண்டு தோள்களைப் பெயர்த்துப் புலாலை உண்ணும் வேட்கை மிகுந்து அங்காந்த வாயளாய்த் துணங்கை என்னும் கூத்தினை ஆடா நின்றாள். இவ்வாறு அஞ்கவரு பேய்மகளின் அடுகளத் துணங்கைக் கூத்தை நக்கீரர் பெருமான் நவின்றுள்ளார்:

பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேள் உலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்க பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்டு உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா கிணங்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுனர் நல்வல மடங்க.

- திருமுருகு; 45:59 இந்தத் துணங்கைக் கூத்தினை மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் பி ன் வ ரு மாறு கூறியுள்ளார். ஒப்புமைப் பகுதி உற்று நோக்குதற்குரியது,

கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/42&oldid=585924" இலிருந்து மீள்விக்கப்பட்டது