பக்கம்:முருகன் முறையீடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

புல்லரிடம் சென்றவர்கள் பொருள்வேண்டி
அவர்தம்மைப் புகழா வண்ணம்
எல்லையிலா மிகுசெல்வ மெய்தியிடும்
பேறுடனே இனிதே பார்க்கும்
இல்லையென உரையாது ஈத்துலக்கும்
புகழெனக்கிங் கின்றே தாராய்
சொல்விலருந் தணிகையில்வாழ் செல்வமே
அம்பிகையாள் துாய சேயே.

விட்டது பற் றென்னுமோர் வீரமெனக்
குண்டாகி விரைந்து ஞான
நிட்டையில் நின் றுன்பாதம் நிலையெனவே
போற்றிடுதன் னேயங் கொண்டு
இட்டமுறு வாழ்வதனை யிகழ்த்துமன
முன்னடியே யேத்தும் பேறு
திட்டமுடன் அருளுவையே செல்வனெனத்
தணிகையில்வாழ் தேவர் கோனே.

வனப்பெய்தோ ரழகியளாம் பூங்கொடியாள்
வள்ளிதனை வரிக்க வெண்ணி
தினைப்புனத்தே சென்றீரத் தேவியரைக்
கொண்டின் பந் திளைத்தீ ரென்னே!
தனக்கெனவோ மனச்சோர்வு தயக்கமிலா
வூக்கமொடு தானே சென்றீர்
மனக்கவலை கொண்டின்று
மயங்கியழுஞ் சேயனெனை மறத்தல் நன்றோ

பொல்லாத பாபியெனும் போக்கரிய
பழியும் நின் புகழ்பு கன்றால்
சொல்லாம லோடுமென வேசொல்லிச்
சென்றார்கள் தூயோ ரெல்லாம்
கல்லாத முடனொரு காலத்தும்
நின்சேவை காணா தென்னே
வல்லாள கானமகள் மணவாள
வந்தருள்செய் வயலூர் வேந்தே

ஆதுலராய் வந்தோர்க்கு அமுதளிக்கும்
பெருந்தகைமை படைந்தே னில்லை
ஒதுறுநம் பேரின்ப நெறியூட்டும்
வேதமென்ப துணர்ந்தே னில்லை