உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகருந் தமிழும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

            திருத்தணிகேசன் துணை
           முருகரும் தமிழும்


முருகக் கடவுளுக்கும் தமிழுக்கும் உள்ள இணைபிரியா நிலை வேறு யாருக்கும் எதற்கும் இல்லையெனத் துணிவுபடக் கூறலாம். இதனுண்மை தமிழ் நூல்களெல்லாம்,

'தமிழ்க்கடவுள்', 'செந்தமிழ்க் கடவுள்', 'செந்தமிழ் நூலோன், 'தமிழ்க்கு நல்ல தண்டமிழ் முருகன்' - இன்ன பல திருநாமங்களிட்டு இவரை அழைப்பதாற் பெறப் படும். முருகபிரான் தமிழ்க்கடவுள், தமிழ்ப்புலவர், தமிழ் விநோதர், தமிழ்க்குரு, தமிழ்ப்பிரியர், தமிழ்ப்பித்தர், தமிழ் மருந்துண்போர் என்பதற்குச் சான்று கூறுவோம்.

1. தமிழ்கடவுள் தமிழுக்கு ஆதார பூதமானவர் :

(1) சேய் தமிழ்நாம் சீர்க்கு ஐ (இயற்றமிழ் நூலுக்குரிய முப்பது சீருக்கும் புலவனாகிய தெய்வம்) -கந்தரந்தாதி-31

(2) செந்தமிழ் நூற் சீரங்க ராக விநோத என்பார்க் கில்லை தீவினையே-(செவ்விய தமிழ்ப் பநுவவின் சீர்முதலிய எட்டுறுப்புக் குரிய பாவலனே கீதத்தில் உல்லாசனே! என்று துகிக்கின்றவர்க்குத் தீவினை இல்லை) -கந்தரந்தாதி-98