பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1002

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - பூம்பறை) திருப்புகழ் உரை 529 எல்லாத் தலங்களில் உள்ளாரும் புகழ்கின்ற நதி சேரும் சோலைகளால் அழகு பெறு செல்வ (அல்லது இன்ப) வளங்கள் கூடிய நாடனே! போர் செய்ய வந்த சூரர்களும், (கிரெளஞ்ச) கிரியும் ஊடுருவும்படியும், கடலில் நீர் வற்றவும், வேலைச் செலுத்தியவனே! சொல்லுதற்கரிதான தமிழ் முனிவராகிய அகத்தியர் புகழ்கின்ற புகழிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (மயிலின் மீது வரவேணும்) பூம்பறை 402 மாந்தளிர் போல (நிறமுள்ள தோலால்) மூடப்பட்ட உடலை உடைய மாதர்கள் (அத்தான் - மாமா) என்னும் உறவு முறையாக முறை பேசி (க் காட்டும்) விருப்பமானது பெருத்த மோகத்துக்குச் சாந்தியை (அமைதியைத்) தரவேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த வீடுகளைத் தேடி அவர்களோடு உறவாடி உயர்ந்து நிற்கும் கொங்கை மேல் சந்தனம் ஆகிய Լ16Ն) (நறுமணங்களைப்) பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க விளையாடிப் (பின்னர்) ஈங்கிசைகள் (இம்சைகள் - உபத்திரவம்) உண்டாக, லச்சையில்லாமல் பொருந்திய விலைமாதர்களின் (பொது மகளிரின்) உறவு நன்றா? (உறவு கூடாது என்றபடி)