உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1004

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கொடுங்குன்றம் திருப்புகழ் உரை 531 பாம்பின் முடியின்மேல் தாந்ததிமி தோதி சேசெ என்னும் ஒசையை அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடமாடுகின்ற பாண்டவர் துணைவனாம் ரீ கிருட்டிணபிரானது (திருமாலின்) மருகனே! அழகிய தளிர்கள் விளங்கும் வேங்கை மரங்களும், புன முருக்கு மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காக (நிரம்ப) விளங்கும் சோலையும், அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை நாய்களும் திகழும் பூம்பறையில் வீற்றிருக்கும் பெருமாளே. (விலைமாதர் உறவாமோ) கொடுங்குன்றம் 403 மன்மதனுடைய அம்பு ஒன்று அஞ்சும் (ஒன்று அம்பு அஞ்சும்) (பொருந்திய மலர்ப் பாணங்கள் ஐந்தும்) தங்குகின்ற கண்களாலே நெருங்கி எழுந்துள்ள பொன்மலை, குடம் போன்ற கொங்கையாலே (முன் பக்கத் தொடர்ச்சி) t கோம்பை - தேங்காய் முதலியவற்றின் மேலோடு. இங்கு " உலாவு கோம்பைகள் குலாவு" என வருவதால் கோம்பைகள் என்பது கோம்பை நாய்களைக் குறிக்கலாம். கோம்பை நாய்கள் மதுரை மாவட்டம் கோம்பை என்னும் ஊரில் உள்ள பெரிய செந்நிற நாய்கள்; காவல் காப்பதில் தேர்ச்சி பெற்றவை.

  1. பூம்பறை - கணவாய்த் தொடக்கத்தின் சமபூமியில் உள்ள ஒரு ஊர். மேலைப் பழநிக் கிராமங்களுள் முக்கியமானவற்றுள் அது ஒன்று: முருகவேளுக்கு விசேடமான திருக்கோயிலைக் கொண்டது. (மதுரை

மாவட்ட கசெட்டீர்)