உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1043

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 420. ஆண்டருள தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனதான உடுக்கத் துகில்வேனு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணு நல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை. ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாளி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங்; கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம். க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ க்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே: "குடக்குச் சிலதுாதர் தேடுக வடக்குச் சிலதுாதர் நாடுக குணக்குச் சிலதுாதர் தேடுக வெனமேவிக். குறிப்பிற் குறிகானு மாருதி னித்தெற் கொருதுாது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ. 'சீதையைத் தேட வடக்கு திசைக்குச் சதவலியையும் கிழக்குத் திசைக்கு வினகனையும், மேற்குத் திசைக்குச் சுசேணனையும், தெற்குத் திசைக்கு அதுமார், சாம்புவான், நீலன், அங்கதன் முதலானோர்களையும் சுக்கிரீவன் அனுப்பினான். வடக்கு, கிழக்கு மேற்கு மூன்று திசைகளிற் சென்றவர்கள் தேடிக் காணாமல் ஒரு மாதத்துக்குள் திரும்பினார்கள். தெற்கே சென்றவர்கள் தேடிக் காணாது சடாயுவைப்போல நாம் இறப்பதே நன்று' எனப் பேசிக் கொண்டபோது, சடாயுவின் தமையன் சம்பாதி இதைக் (அடுத்த பக்கம் பார்க்க)