பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1090

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 617 அழகிய (இடது) பாதியில் உறைகின்ற சத்தி, கெளரி, மழல்ைச் சொல்(பேசும் மாது, பவள நிறமும் பச்சை நிறமும் கொண்ட வடிவினள், சிள்ை, எனது குற்றம் நிறைந்த ஏழு பிறப்பையும் அறுத்த உமாதேவி ஈன்ற செல்வமே! காசி, ராமேசுரம், ரத்னகிரி (திருவாட்போக்கி), சர்ப்பகிரி (திருச்செங்கோடு), திருவாரூர், வேலூர், தேவூர், கச்சி (காஞ்சிபுரம்), மதுரை, ருப்பறியல், 55TরYou (திருவானைக்கா), மூதூர் (பழம்பதியாகிய) அருணைக்கிரி (அருணாசலம் திருவண்ணாமலை), திருத்தணிகை, திருச்செந்துள்ர், நாகப்பட்டினம் சீர்காழி, வேளுர், பழநிமலை, திருக்குறுக்கை, திருநாவு: லூர், திருவெண்ணெய்நல்லூர் என்னும் தலங்களிலும், விசேடமாக் விளங்குவதும் உனக்குப் பிரியமான துமான சோலை வளர் மலையிலும் (சோலை மலையிலும்) உறைகின்ற, (சீவன்முத்தர்கள்) வீடுபேறடைந்தோர் புகழ்கின்ற, தம்பிரானே! (யோக பேதவகை - ஒட்டும் வகை யின்று தாராய்) (முன் பக்கத் தொடர்ச்சி) * குறுக்கை - இதுவும் அட்டவீரத் தலங்களில் ஒன்று. காமனை எரித்த தலம்; மாயூரத்துக்குப் பத்து மைல் தூரத்தில் உள்ளது. தேவாரம் பெற்ற தலம். tt திருநாவலூர் - சுந்தரமூர்த்தி நாயனார் திரு அவதாரம் செய்த தலம் விழுப்புரம் திரிசிராப்பள்ளி புகைவண்டி வழியில் திருவெண்ணெய் நல்லூர் ரோடு நிலையத்திலிருந்து 9 மைல். ++ திருவெண்ணெய்நல்லூர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆட்கொளப்பட்ட் தலம். திருவெண்ணெய்நல்லூர் ரோடு நிலையத்திலிருந்து 4 மைல் இதன் முற்பாதியின் சுருக்கப் பொழிப்பு. இடைகலை பிங்கலை என்னும் இரு நாடி மார்க்கமாக ஓடிக் கழியும் பிரான் வாயுவை மூலாதாரத்தி லுான்றி, அங்கிருந்து சுழுமுனை நாடி மார்க்கமாக மற்றை ஆதார கமலங்களிலும் ஒட்டி நிறுத்தி, அப்பால் 100' இதழோடுங் கூடிய குரு கமலத்திற் செலுத்தி, அங்கு நாத ஓசையும் மதிக்க்லாமிர்தமும் ப்ொங்கியெழ, அவற்றோடு கூடி ஒருமிக்கச் செய்து, சரசத்திக்கு ஆதாரமாகவுற்ற நந்தியொளியையும் ஊமையேனுக்குத் தெரிசிப்பித்து உனது முத்திபெற மூலவாசல் வெளிவிட்டு, இங்ஙனஞ் செய்வதில் அட்டாங்க யோகமும் பொருந்தும் வ6 இன்று தந்தருளல் வேண்டும்.