பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 143 57 (உண்மை நெறியாகிய) ஒன்றை ஆராய்ந்தறியாமலும் பாராமலும், அழகுடன் வந்து(ஆண் மக்களின்)உயிர் சோர்ந்து போம்படி ஊடி, நல்லதே கிடைக்காதவர் போல நின்று அளவு கடந்த ஆசை மயக்கத்தைத் தந்து திரியும் மாதர்களின்; விருப்பமில்லாத (வெளி) அன்பிற் சோர்வுற்று நின்று எலும்போடு கூடிய (இச்) சரீரம் ஒய்ந்து நின்று உள்ளங் குலைந்து போகாதபடிமலைபோன்ற செவ்விய அழகிய தோளனே! (அல்லது செம்பொன்மலை போன்ற தோளனே!) நினது சொல் (நினது திருப்புகழ்) நேர்நின் றுதவும் என்று (உலகோர்) கூறும்ாறு அருள்பாலிப்பாயாக தோல்வியே அறியாத வெற்றிப் போர் செய்பவனே! மணம் வீசும் தோளனே! கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவனே! சூதாக எட்டுத் திக்கிலும் சென்று பொருந்தி வஞ்சம் (செய்த) சூரனாகிய மாமரத்தை அஞ்சும்படி பொருத வேலனே! சீர்நிறைந்த கொன்றை மாலை (அல்லது, சீரான ஆத்தி, கொன்ற மாலைகள்) மார்பில் திகழும் அந்த விடையேறியாம் எந்தைக்கு (சிவபிராற்கு) இனியவனே! தேன்போல இனிப்பவனே! அன்பர்க்கே ஆம் இன்சொல் (அன்பர்க்கென்றே பொருந்திய இன்செர்ல்) கொண்ட சேயே! திருச்செந்துார்ப் பெருமாளே! (நின்சொற் கோடா தென்கைக் கருள்தாராய்)