உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 முருகவேள் திருமுறை 12 - திருமுறை ககன கோளகைக் கணவிரு மளவாக் கங்கைத் துங்கப் புனலாடும். கமல வாதணற் களவிட முடியாக் கம்பர்க் கொன்றைப் புகல்வோனே; சிகர கோபுரத் தினுமதி எளினுமேற் செம்பொற் கம்பத் தளமீதும் 2தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச் செந்திற் கந்தப் பெருமாளே.(48) 64. ஆண்டருள குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு சீயூன் பொதிதோல். குலவு குரம்பை முருடு சுமந்து குணகிம கிழ்ந்து நாயேன் தளரா; அடர்மத னம்பை யனையசு ருங்க னரிவையர் தங்கள் தோடோய்ந் தயரா. அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து நீயான் டருள்வாய், தடவியல் செந்தில் இறையவ நண்பு தருகுற மங்கை வாழ்வாம் புயனே. சரவண கந்த முருகக டம்ப தனிமயில் கொண்டு பார்சூழ்ந் தவனே, 1. ஒன்று - ஒப்பற்ற பிரணவப் பொருள் திருப்புகழ் 19, 21. பார்க்கவும். 2. தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லைவாயில் இதுவே. சம்பந்தர் II-88.2.