பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 253 (யாவரையும் சூழ்ச்சியிற்)கொன்ற கிரவுஞ்ச மலை தூளாகவும், சூரன் பொடிபடவும், போரிற் பயிற்சி கொண்ட திருக்கையை அசைத்துச் செலுத்திய ஒப்பற்ற வேலனே! நஞ்சம் உண்ட கழுத்தில் ருத்ராக்க மாலைகளையும், தேவர்களுடைய எலும்பு மாலைகளையும் வரிசையாக அணிந்து, (சுடுகாட்டு) எரியிடையே சென்று ஆடுகின்ற தந்தையாம் சிவபிரான் மகிழுங் குருநாதனே! பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள் த்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் விளங்கும் பெரும்ாளே! (திருப்புகழ் நித்தம் பாடும் அன்பு தந்தவன் நீயே) 106 (தீமைகள் செய்ததனால் நிந்தனைகளுக்கு ஆளாகி அலையா. மலும்,) (நன்னெறியை) அறியாத (கைக்கொள்ளாத) வஞ்சகர்களுடன் இணங்குவதைக் கருதாமலும், (நீ எனக்கு அருளிய) உபதேச மந்திரப் பொருளையே துணையாகக் கொண்டு, உன்னை நான் நினைந்து (உனது திரு) அருளைப் பெற மாட்டேனோ! யானையின் சிறந்த முகத்தையுடைய கணபதிக்குத் தம்பியே! இமய ே ஜன் மகளாம் (பார்வதி என்கின்ற) உத்தமியின் ள்ளையே! 'ஜெபமாலை (ஒன்றை எனக்குத்) தந்த சற்குரு நாதனே! திரு ஆவினன்குடிப் பெருமாளே! (உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ!)

  • இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும்.