பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 261 திரு ஆவினன்குடியில் எழுந்தருளியுள்ள வேளே! அழகனே! 'உலகில் உண்மைப்பொருளைக் கண்டு தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாளே! (அருள் ஞான இன்பமது புரிவாயே) 110 சொல்லுதற்கு அருமையான செந்தமிழ் இசையிலே சில பாடல் களை அன்பொடு பயிலுதற்கு வேண்டிப் பல நூல் களையும் படித்து உணராமல் - பவளத்தையும் விழிப் பழத்தையும் நிகர்க்கும் வாயையுடைய மாதர்களின் தேமல் பரந்த கொங்கையைப் பெற விரும்பி ஊக்கத்துடனே; சகர புத்திரர்களால் ஏற்பட்ட கடல் சூழ்ந்த அழகிய (இப்) பூமியில் இவ்வாறு நான் திரிந்து, அலைந்து, சருகு போன்று உள்ளம் சோர்வுற்று உடல் மெலிவதற்கு முன்னே - தக தித்திமி தா கிணங்கின என்னும் ஒலியுடன் வருகின்ற கலாபங் கொண்ட குதிரையாம் மயில்மீது அற்புதமாக எழுந்தருளி வந்து அருள்புரிவாயே! உண்ணுக, இது ஞானத்தைத் தரும் என்று உமையம்மை மொழிந்து (பொற் கிண்ணத்திற்) பொழிந்து தந்த பாலை உண்டவனும், சொல்லப்படும் மெய்ப்பு (வாய்மை, புகழ்ச்சி) நிறைந்தவனுமான குழந்தை என்று பாராட்டப்படும் இளையோனே! 1. இது உருத்திர சன்மராய் முருகவேள் சங்கத்தார் கலகம் தீர்த்த திருவிளையாடலைக் குறிக்கலாம். 92 ஆம் பாடலைப் பார்க்கவும்.