பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 273 குழந்தை என்று எடுத்து மகிழ்ந்த உமையின் திருமுலைகளைப் பற்றி (ப்பால்) உண்ட குமரனே! சிவமலையில் அமர்ந்த குகனே! வேலனே! சிறு குடிசைக்கு (அயலே) மிகவும் நெருங்கி நின்ற பரண் அன்ம்ந்த (தினைப்) புனத்திலிருந்த குறவர் மகள் (வள்ளியைப்) புணர்ந்த பெருமாளே. (வேசையர்க்கு இரங்கி மெலிவேனோ!) 115 குன்றும் குன்றும்படியும் செண்டும் கன்றும்படியும் வளர்தின்ற முன்லயில் க்ஸ்துாரிக் கலவை பூண்பவர்; நிலாப் போலவும் அழகு தங்கும் குளிர்ந்த செந்தாமரை போலவும் விளங்குகின்ற முகத்தை உடைய மாதர்கள்: கொஞ்சுதல், கெஞ்சுதல் செய்து வஞ்சகமாக ஒற்றுமை வரும்படியான ஒப்பற்ற செயல்களைப் புரிபவர் --- (ஆகிய வேசையர் தம்) சூழ்ச்சி யாலும் - கும்பல் கூடியிருத்தல், வேடிக்கை, அழகு, அகம்பாவம் (இவ்விலக்கணங்கள்) தம்முட் குடியாக வளர்ந்துள்ள பொல்லார்கள், கடுமையுள்ளவர்கள், எங்கே எங்கே எமக்கு (உரிய பங்கு என்று அடிக்கடி கூறி எப்போதும் தமக்குச் சொந்த மென நலம்பேசி அணைபவர்; கொஞ்சமே உள்ள இன்பத்தைத் தந்து எனக்குள்ள பொருள்கள் அனைத்தையும் நய (வஞ்சனையால்) கவர்ந்துகொள்பவர்கள் (ஆகிய வேசையர்மீதுள்ள) காம இச்சையாலும் - எஞ்ஞான்றும் மனம் கன்றி நொந்து போதலையும் துன்பத்தையும் கொண்டு(ள்ள) நான் உனது அழகிய இண்ைமல்ரடிகளைப் பரவுதல் நல்லதென்றும்னத்தினில் அறிந்து, என்றும் (உனது திருக்கோயிலுக்குச்) சென்று த்ொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவினில்நின் அருளால் நான் பெறவும், (அங்ங்ணம் உணர்வதால்) இன்பமும், நற்பண்பும், உற்சாகமும் சேர்ந்து நிரம்பும் ப்டியான அருளைப் பெறவும், நீ அனுமதிக்கும்படியான வழியை முன்னதாக அருள்புரிவாயாக;