உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 முருகவேள் திருமுறை 13- திருமுறை உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன் ம்ெய்ப்படு பத்தியினின்க்க மேதிபற வுட்குளிர் புத்தியையெனக்கு நீதர வருவாயே! 'கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ் வுற்றொரு tபொற்கொடி களிக்க வேபொரு கற்பனை நெற்பல அளித்த காரண னருள்பாலா. கற்பந கர்க்களி றளித்த மாதனை பொற்புய மைப்புயல் நிறத்த வானவர் கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர என நாளும்; நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர் நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே. நட்டுவர் மத்தள முழக்க மாமென மைக்குல மெத்தவு முழக்க மேதரு நற்பழ நிப்பதி செழிக்க மேவிய பெருமாளே. (83) 'கற்ற தமிழ்ப் புலவன் - சுந்தமூர்த்தி சுவாமிகள். இவர் ஆதி சைவ குலத்திற் (சிவப் பிராமண குலத்திற்) பிறந்தும் நரசிங்முனை அரசரால் வளர்க்கப்பட்டாராதலின், திருக்குறள் ஆதிய பழைய தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி யடைந்திருந்தார். (இவரது திருநெல்வாயில் அரத்துறைப் பதிகத்தைப் பார்க்கவும் தேவாரம் - wii - 3 2, 3. பி. 7.) tபொற்கொடி - பரவை நாச்சியார்: சுந்தரர் திருவாரூரில் பரவையாரொடு வாழ்ந்திருக்குங் காலத்தில் குண்டையூர்க் கிழவர் என்பவர் சுந்தரருக்கு நெல் தவறாது அளித்து வந்தார். ஒரு போது மழையின்றி வளம் சுருங்க, சுந்தரருக்கு அனுப்புதற்குப் போதிய நெல் இல்லையே எனக் குண்டையூர்க் கிழவர் வருத்தமுற்றார். அவர் வருத்தம் நீங்க இறைவன் குண்டையூர் முழுதிலும் நெல் மலையை அளித்தார். இந்த நெல்மலை எங்ங்னம் திருவாரூருக்குச் சுந்தரர் வீட்டுக்குப் போய்ச் சேருவது என அவர் வருந்திச் சுந்தரரிடம் சென்று தமது இயலாமையைத் தெரிவிக்க, சுந்தரர் கோளிலி என்னும் தலத்திற்குப் போய் "நீள நினைந்தடியேன்" என்னும் திருப்பதிகம் பாடி " குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன், ஆளிலை யெம் பெருமான் அவை அட்டித் தரப்பணியே" - எனத் துதித்தார். இறைவன் ஆணையால் அந்த நெல் மலை பூதங்களால் திருவாரூரிற் சேர்க்கப்பட்டன பரவையர் மிக மகிழ்ந்து அவ்வூராரெல்லாரும் தங்கள் தங்கள் வீட்டின் எல்லையைச் சேர்ந்த நெற்குவியலை எடுத்துக் கொள்ளலாம் என்று பறை யறைவித்தனர் - என்பது பெரியபுராண வரலாறு.