உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 முருகவேள் திருமுறை 13- திருமுறை உருகியே யுடலற வெம்பி வாடியெ வினையிலே மறுகியெ நொந்த பாதக னுனதுதாள்தொழுதிட இன்பஞானம தருள்வாயே! அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ அடலதோ டமர்புரி கின்ற கூரிய வடிவேலா. அரகரா வெண்மித அன்பர் சூழவெ கடியதோர் மயில்மிசை யின்றை யேறியெ அவனியோர் நொடிவரு கின்ற காரண முருகோனே. பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் மருகோனே. பரமமா நதியுடை கொண்ட ணாவவெ வனசமா மலரினில் வண்டு லாவவெ பழநிமா மலைதனி லென்று மேவிய பெருமாளே (85) வேள் பூமியை வலம் வந்தது: ஒருமுறை சிவபிரானும் தேவியும் விநாயகரையும் முருகவேளையும் நோக்கி இவ்வுலகினை முதலில் வலம்வருபவர்க்கு இம் மாதுளங்கனியை (மாம்பழம் எனவுங் கூறுவர்) தருவேன்' என, முருகவேள் மயில்மீதேறி உலகை ஒரு நொடியில் வலம் வந்தார். அங்ங்ணம் அவர் வருவதற்குள், விநாயகர் உலகெலாம் தம் பெற்றோருள் அடக்கம் என அறிந்து தாய்தந்தையரை வலம் வந்து அவர்களிடம் பழத்தைப் பெற்று நின்றார்; இதைக் கண்ட முருகவேள் கோபங்கொண்டு பூமியில் திருவாவினன்குடிக்கு வர, இறைவனும் தேவியும் அங்கு வந்து பழம் நீயே ஆதலின் உனக்கு வேறு பழமும் வேண்டுமோ?" என அவருக்கு ஆறுதல் கூறினார், பழம் நீ" என்பது பழநி ஆயிற்று (திருப்புகழ் 117, 1210 பார்க்க), (திருப்புகழ் ஆராய்ச்சி மூன்றாம் பாகம் தலைப்பு 17, 68 பார்க்க). இதன் விரிவைப் பழநிப் புராணத்திலும், வலம் வந்து இறைவன் எங்கும் உள்ளனர் என முருகவேள் காட்டிய உண்மைப் பொருளைச் சுப்பிரமணிய பராக்ரமத்திலும் காண்க. முருகவேள் (பூமிக்கு) வந்த வரலாறு: (பழநி - சிவகிரி என்பது அகத்தியர் தம்மை வணங்கிய இடும்பாசுரனை நோக்கி வடக்கே திருக்கேதாரத்துக்கு அருகே இருந்த சிவகிரி, சத்திகிரி என்னும் இரண்டு மலைகளையும் கொண்டு வரும்படி கட்டளை