உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருெப்பரங்குன்றம்) திருப்புகழ் உரை 29 அணைத்தும், அங்கையின் அடிப்பாகந்தோறும் நகக் குறி எழ,உதட்டை மென்று பற்களால் குறிகள் இட அடி ந்ெஞ்சில் நின்றும் மியில் குயில் புறாப் போன்று மிக வாய்விட்டு (ஒலி எழ), உருக்க வல்ல நெருப்பிலிட்ட ெ போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால் வருகின்ற பயன்களைப் பெற, கையில் உள்ள பழம் போல விளங்கிய முலைமேல் வீழ்ந்து, உருவம் கலங்கி, உடல் உருக, அமுதம் பெருகும் பெருத்த உந்தி (த் தடத்தில்) மெய் உணர் அற்றுப்போகும் வண்ணம் உழைக்கின்ற பெருத்த கல 器 பத்தில்) மகிழ்வதை விட்ட்ொழியேனோ? 'இருக்கு வேத மந்திரத்தை எழுவகை முநிவர்களும், (சப்தரிடிகளும்) அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந் ன்! சரவணபவனே! குகனே! இதம் தருவதும் இங்கித்ம் (இனிமை) தருவதுமாய் விளங்கும் அறுமுகங் கொண்ட அழகிய வேளே!” என்று அமைத்து இலக்கணங்கள் (பொருந்த) இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரமிக்க கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாகத் (திருப்)புயத்தில் (மாலையாக) அணிப்வனே! களிப்புடன் (திரு) அம்பலத்தின் மீது அசைந்து (கூத்து) ஆடும் சங்கரரும், (தமக்கு) வழிவ அடியவராம் (மாணிக்க வாசகருக்குத் திருப்பெருந்துறையில்) திருக்குருந்த மரத்து அடியில் அருள்பெறும் வண்ணம் அருள் செய்த குருநாதரும் (ஆகிய சிவபிரானது)திருக்குழந்தை என்ற (நிலையிலும்), அந்தச் சிவபிரானே வழிபட்டு நிற்கும் குருமூர்த்தி என்னும் பெருநிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே! திருப்பரங்குன்றத்தில் உறைகின்ற சரவண (மூர்த்தியே, பெருமாளே!) (கலவியில் மகிழ்வது தவிர்வேனோ?)