பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப் புகழ் உரை 439 தினைப்புனத்தின் மாட்டு (தினைப்புனத்துக்கு முன்பொருகால்) நடந்து குறவர் கொடியாகிய (வள்ளியை) மணஞ்செய்து ஜெகமுழுதும் ஆளவந்த பெரியோனே! செழிப்புற்று வளம்பொலிந்த மலர்ச்சோலைகள் நிறைந் துள்ள திருப்பழநியில் வீற்றிருக்க வந்த பெருமாளே! (உனையே வணங்க வரவேணும்) 187 மொட்டு நிலையில் உள்ள தாமரை மலர் போலவும், ஒளி வீசுகின்ற அழகிய பொன்மலை போலவும், முதிர்ச்சி அடையாத இளமைத் தன்மையில் உள்ள கொங்கைப் பாரங்களை உடைய மாதர்களின் தோள்களில் - முழுதி அமிழ்கின்ற (சிற்றின்ப) அதுபோக வீணன் என (இரங்கி)ப் பெரியோர்கள் சொல்லுகின்ற நன்மொழி. களைப் பொருட்படுத்தாமல் தலைகீழாகச் (செருக்கி) விழுந்து, உள்ளங் களிப்புறப் பலவகையான இன்பத்தைத் தரும் அமுதமே என்னும்படியான இதழுறலைத் தரும் கிம்மக்களாம் (மூடராம்) பொதுமகளிருடைய டுகளுக்குப் போய். (அவர் தரும் இதழுறலை) மிகவே உண்டு - அழிகின்ற இந்தத் தனியனேனும் யாவராலும் . போற்றப்படுகின்ற உன்னுடைய இரண்டு திருவடி அமுதையும் உண்ணும்படியான ஞானத்தை அருள்புரிய மாட்டாயோ (அருளுதி - என்றபடி) மகர மீன்களை எறிகின்ற திரைகள் மோதுகின்ற ஒளி பொருந்திய கடலில் உள்ள விசாலமான நீர், கலங்கும் நீராகிக் கெட வேலைச் செலுத்தியவனே! நிரை நிரையாக வந்த அசுரர்களுடைய மகா (பெரிய) சேனைகளின் கால அளவு முடியும்படி மயிலில் ஏறிவந்த பன்னிரு கரங்களைக் கொண்ட் தீரன்ே! முருகனே!