பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 29 2O7 ஆசையும் அதனால் வரும் இன்னாவும் (துன்பமும்) உள்ள இந்தப்பூமியிற் காணப்படுகின்ற மாதர்கள் என்கின்ற அவர்களுடன் வாழ்வு நெருப்பில் வாழ்வதை ஒக்கும் என்று உணராமல் பாம்பால் உண்ணப்படுகின்ற அந்த வேதனையைக் கொண்ட தேரையின் கதியை அடைகின்ற அறிவைக் கொண்டவனாகி, உள்ளத்தில் ஆசை கொண்ட அக்காரணத்தினாலே. 'சிவாய' என்கின்ற திருநாமத்தை ஒரு போதும் நினையாத (இருளுக்கு இடமானவனை) அஞ்ஞானம் பூண்டவனை (என்னிடம்) வா என்று (அழைத்து) அருள்புரிவாயாக (உன்னை) மறத்தல் என்கின்ற குற்றத்தை நீக்குகின்ற அடியார்களும், அருமை வாய்ந்த மகா தவசிகளும் தியானஞ் செய்கின்ற திருவடியைத் தந்தருளுக. S (பிணிமுகம் எனப்படும்) யானையையும், இனிய காட்டில் உலவும் மயிலையும் வாகனமாகக் கொண்டு உல்லாசத்துடன் அவை மீது ஏறும் திருவடியை உடையவனே! S முருகவேள் " தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யானை மேல் வந்து அருள் செய்தல் இயல்பு" - திருமுருகாற்றுப்படை நச்சினார்க்கினியர் உரை "சிந்தை சந்தொஷித்து ஆளு கொண்டருள வந்து சிந்துரத்து ஏறி" திருப்புகழ் 598. மயில். " கான மயில் மேல் தரித்த பெருமாளே." திருப்புகழ் 790 உவா. இளமை எனப் பொருள் கொண்டு - இளமையும் இனிமையும் கொண்ட மயில் எனவும் பொருள் காணலாம்.