பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் திருப்புகழ் உரை --- 75 வாயுவினால் உடம்பில் பரவுகின்ற தாமரை போன்ற சொறி படை நோய்,மூக்கடைப்பு நோய், பின்னும் (ஒழுக்கங்கெட்ட) மாதர்களுடன் இணங்குவதால் கிடைத்த ஆப்ரணங்கள் என்று சொல்லத்தக்க பறங்கிப் புண், கிரந்திப் புண் ஆகிய மேக நோய் வகைகளாகும் பாவ நோய்ப் புண்கள் ஆய இவை உடனே எனைப் பீடிப்பதால். பாயிலே விடாது படுத்துக் கிடந்து (உடல் நலம்) குறைந்து அக்காரணத்தால் நினது பாத மலர்களில் (நேயம்) அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் என்கின்ற கள்ளைக் குடித்து (அல்லது பாவச் செயல்களுக்கு இடம் தரும் கள்ளைக் குடித்து) அதனால் வெறி மயக்கம் மிகுந்து குற்றந் தரும் பாசக் கட்டுகளான வலைகளில் அகப்பட்டு அலைந்து, இழிவான சாதித் தொழில்களிலே நான், வலிமை யற்று அழிந்த பின், மூடன் எனப் (பிறர்) (என்னைச்) சொல்வார். அங்ங்னம் பிறர் சொல்வதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆண்டருளுக. மாமரம், மகி ழமரம் (வகுளம்), பாலைமரம், கொன்றை மரம் இவைதம் பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற் பதும், தோரணங்களும் நல்ல வீடுகளில் எங்கும் உயர்கொடிகளும் தழைந் துள்ளதுமான சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே! (அருள் கூர வந்து எனை ஆள்வாய்) 229 அன்பு பூண்ட தன்மையில், மாதங்கள் செல்ல (வளர்ந்து), அந்த அன்பினால் வளரும் உடலானது தொடர்ச்சியால் (வளர) வயது நிரம்பி