பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/ 110 முருகவேள் திருமுறை 15- ஆம் திருமுறை தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழிலவமது புரியாதே. திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெறஅருள் புரிவாயே பரிவுட னழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம். பருகிடு பெருவயி றுடையவர் 'பழமொழி எழுதிய கணபதி யிளையோனே, பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள்தரு குமரேசா. பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திருமலை பெருமாளே. (1) திருவேங்கடம் (திருவேங்கடம், வடமலை என்பன திருப்பதி. சித்துார் மாவட்டத்தில் உள்ளது, புகைவண்டி நிலையம் பிரபல விட்ணு தலம். ஸ்வாமிகள் காலத்தில் விட்ணு ஆலையம் முருகர் ஆலையம் இரண்டும் இத்தலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது இத்தலத்துக்குத் திருப்புகழ் இருப்பதாலும், ஸ்வாமிகளே "உலகின்ற பச்சை யுமை யணன் வடவேங் கடத்தி லுறைபவன்" எனத் திருவாஞ்சியத்துத் திருப்புகழிற் (816) கூறுதலாலும் பெறப்படுகின்து) "பழமொழி எழுதிய கணபதி.முத்தமிழ் அடைவினை...எழுதிய (விநா.1); பாரதத்தை எழுதின வரலாற்றைத் திருப்புகழ் 88, 441, 960,1019, 1098 பாடல்களிலும் காண்க