உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருவேங்கடம்) திருப்புகழ் உரை 125 திகைக்க, (என்) அரிய உயிரை வாங்கவரும் காலன் கையிற் பட்டு நான் தனியே (துணையின் றிச்) செல்வது இயல்போதான். (நீதியோ தான், தகுதியோ தான்); காந்தள் மலர் போன்ற திருக்கரங்களை உடையவளும், மான் பெற்ற காட்டு மயில் அனையவளுமான, (வள்ளியின்) மனவாளனே! விசாகனே ! சரவணனே! (செவ்) வேளே! அழகிய தேவர் தலைநகரை (அமராவதியை) ஆண்டவனே! வேதப் பொருளாம் நம்பியே! பம் (யான்ை) போற்றி வளர்த்தமின் போன்ற தேவசேனையின் மணவாளனே! வேந்தனே! குமரனே! குகனே! சேந்தனே! மயிலனே! (மயில் வாகனனே) வடவேங்கட மாமலையில் உறைபவனே! வேண்டும் போதெல்லாம், அடியார்கள் (தங்களுக்கு) வேண்டியுள்ள போகத்தைச் (சுகத்தை) உன்னிடம் விண்ணப் பித்துவேண்ட, (சற்றேனும்) வெறுப்புக் காட்டாமல் வேண்டிய அந்த போகத்தை அவர்களுக்குத் தந்து) உதவும் பெருமாளே! (காலன் வசம் யான் . போய்விடுவதியல்போ தான்) 248 ரேகைகள் சேர்ந்துள்ள சேல் மீனோ, கயல் மீனோ, என்று சொல்லத் தக்கதும், ம்ான் போன்றதும், நீண்ட பெரிய கடல் போன்றதும், நீலோற்பலம், மாவடு, செலுத்தத் தயா ராயிருக்கும் வாள் இவைகளுக்கு ஒப்பானதும் ஆன கண்ணை உடைய மாதர்களின் வலையாலும், (சூழ்ச்சிச் செயலாலும்). வளர்கின்றதும், கோங்கின் இள மொட்டு போன்றதுமான கொங்கை மீதுள்ள ஆசையாலும், அவர்கள் முகத்தின் மாயையாலும், வளப்பமுள்ள மாந்தளிர் (மாமரத்தின் தளிர்) போல நிறங் கொண்ட (அவர்களது) வடிவத்தாலும், இருள் போன்ற நீண்ட கூந்தல் நிழலாலும் (ஒளியாலும்) மோகிங் கொண்டு, விரித்திட்ட ಘೀ மீது சேர்ந்து இனிப்புள்ளதும், கொவ்வைக் கனி போன்றதுமான் வாயிதழ் ஊறல்களை உணணாமல