பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தணிகைமணி, திரு. வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம்.ஏ. தணிகைமணி அவர்களின்வரலாறு டாக்டர் தணிகைமணி வ. சு. செங்கல்வராயன் அவர்கள் தென்னாற்காடு மாவட்டம், மஞ்சக்குப்பம் என்னும் ஊரில் மாவட்டநீதிமன்ற நடுவராயிருந்தவத சுப்பிரமணிய பிள்ளையும், அவர் தம் துணைவியார் தாயாரம்மாள் அவர்களும் ஆற்றிய நற்றவப் பயனால் 15 - 8 183ல் அவர்களின் நன்மகனாராகத் தோன்றினார். இவர்தம் தந்தையார் மாவட்ட நடுவராக நாமக்கல், கும்பகோணம், திருத்தருப்பூண்டி, மதுரை எனப் பல ஊர்களில் பணியாற்றிய காரணத்தால் இவரது கல்விப் பயிற்சியும் அவ்வவ்வூர்களில் தொடரலாயிற்று திருவாரூரில் பத்தாம் வகுப்புவரை பயின்றார். பின்னர்த் தஞ்சையிலும் மதுரையிலுமாகப் பயின்று 1901ல் சென்னை வந்து கிறித்துவக் கல்லூரியில் பயின்று பிஏ, எம்ஏ, பட்டங்கள் பெற்றார். அந்நாளில் தமிழ்த்திரு பரிதிமாற் கலைஞரும் மறைமலையடிகளாரும் இவருக்கு ஆசிரியர்களாக அமைந்து தமிழறிவூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதுகலைப்பட்டத்திற்கு ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் உரைநடைவரலாறு என்னும் ஆராய்ச்சிக்கட்டுரை இன்றும் ஏற்புடைமை உடையதாக கருதப்படுகிறது.