உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருவேங்கட) திருப்புகழ் உரை 127 எனது தனது என்னும் ஆசைகளானவை என்னை விட்டு விலகி அற்றுப் போக, கர்மம், வெகுளி, மயக்கம் என்னும் (மும்) மலங்கள் தோன்றுகின்ற கடிய மோக சேஷ்டைகள் ஆகிய இவை நீங்கிடவே, உனது இரண்டு தாள்களை அருள்வாயே! யானை, வாவும் (தாவும்) குதிரை, தேர், திரண்ட சேனை வகளைக் கொண்டவனாம் துரியோதனன் முதலானோர் போர்க்களத்தில் இறந்து போமாறு ஒரு பாரத யுத்தத்தில் உலகை ஆழிப்பதில் (பார்+அதம்+அதில்) அதாவது பூபாரம் குறைப்பதில் ஈடுபட்டு பெருமை வாய்ந்த பாண்டவர் தேரில் (அருச்சுனனுடைய தேரில்) பூட்டிய ஏழு குதிரைகளைத் தூண்டிச் செலுத்திய சாரதி, ஒளி வீசும் சக்கரத்தை உடைய ஹரி, ரகுராமர், அலை நீண்டதாய் ನ್ಡಿ? கடல், வாலி என்னும் குரங்கரசு, நீண்டு ஓங்கி ன்ற மராமரங்கள் ஏழு (இவைகள் மீதும்), பத்துத் தலைகளைக் கொண்ட ராவணனாருடைய முடி பொடியாகும் படியும் வில்லை வளைத்த நாரணனார். ஆகிய திருமாலின் மருமகனாம் குகனே! சோலைகள் சூழ்ந்துள்ள திருவேங்கட மாமலையில் வீற்றிருக்கும் பெருமாள்ே! (இரு தாளினை அருள்வாயே) தீர்த்தம் சரவணப் பொய்கை, மிக விசேடமானது; "திருக்குள நாளும் பலத்திசை மூசுஞ் சிறப்பு" (258) இன்றும் பிரத்தியட்சமாய்க் காணலாகும். "புவிக்குயிராகுந் திருத்தணி" (258) என்பதால் இத்தலத்துப் பெருமை விளங்கும். மிகவும் உயரிய நடையிற் கச்சியப்ப முனிவர் பாடியருளிய தல புராணமும், தணிகை ஆற்றுப்படையும், பூர் கந்தப்ப தேசிகர் பாடிய தணிகாசல புராணமும்" தணிகைச் சந்நிதி முறையும்" அச்சேறி உள்ளன. 127,791 எண் ணுள்ள பாடல்களும் இத்தலத்துக்கு உரியனவாகக் கொள்ளலாம்; பாட வேறுபாட்டைப் பார்க்க