உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 257. திருவடியைப் பெற தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் தனதான பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் களிலேசம். ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் கருக்கட லூடுங் கதற்றும நேகங் கலைக்கட லுTடுஞ் சுழலாதே. கடப்பலர் சேர்கிண் கிணிப்ரயை வீசுங் - கழற்புணை நீதந் தருள்வாய்ே; தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ் சதுர்த்தச லோகங் களும்வாழச். சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ் சளப்பட மாவுந் தனிவீ ழத்; திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ் செருக்கு மயூரந் தனில்வாழ்வே. சிறப்பொடுஞானந்தமிழ்த்ரய நீடுந் திருத்தனிமேவும் பெருமாளே. (9) " கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ" - என்னும் கந்தர் அநுபூதி (32)ச் செய்யுளின் கருத்து. தமிழ்த்ரயம் - முத்தமிழ், tஇவை சூரனுக்கு அரணாயிருந்த எழுகிரிகள். (பாடல் 43) சூருடன் கிரி என வந்தால் கிரி என்பது எழுகிரியே, கிரவுஞ்சமலை அல்ல; கிரவுஞ்சம் தாரகனுக்கு உதவியாயிருந்து அவனுடன் வேலால் அழிபட்ட மலை; சூரனுக்கு உதவியாயிருந்து வேலால் தொளைபட்ட கிரி - எழுகிரி, ஏழுகிரி எனப்படும். சூரனுக்குக் காவலாகி எழுகிரிகள் எப்பொழுதும் மறைந்திருந்து துணை செய்தன என்றும், சூரனையும் அம்மலைகளையும் ஒரே காலத்தில் வேலால் முருகவேள் அழித்தனர் என்றும் கூறுவர். "கிளை பட்டெழு சூர் உரமும் கிரியுந் தொளைபட்டுருவத் தொடு வேலவனே"- கந் - அது - 4. அடுத்த பக்கம் பார்க்க