பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 173 வலி உண்டாகும்படிப் பிரமனைக் குட்டி, நடனஞ் செய்து ஒப்பற்ற உலகங்களை ஈன்ற பச்சை நிறத்துப் பார்வதி தேவியை மணந்த தந்தை பரப்பிரமப் பொருளாம் சிவபிரானுக்கு (உபதேசம்) அருளிய குருநாதனே! (வள்ளிமலைக்) காட்டில் வாழும் மயிலினம் போன்ற, குறத்தி (வள்ளியை) மயக்கி அணைத்து உள்ளத்தில் மகிழ்ச்சி யோடு திருத்தணிகையிற் பற்று வைத்து வீற்றிருக்கும் பெருமாளே! (இவண் உழல்வேனோ) 269 திருட்டுப் பெண்கள், கூத்தாடும் பயனிலிகள், பசையற்ற செருக்குடன் (அல்லது - வனத்துக் காளிபோல) நாள் தோறும் நடிப்பவர்கள், சிறப்புடன் தேகத்தைக் குலுக்கி, (அப்படி இப்படித்) திருப்பும் கண் வலையாலே யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்குக் கர்ப்பிணி வேஷம் போட்டு, இவளுக்குப் பிறப்பது ஆணோ, பெண்ணோ என்ற துர்வாசர் முதலிய ருஷிகளைக் கேட்கத் துர்வாசர் உண்மையை உணர்ந்து, வயிற்றிற் பிறப்பது ஆணுமல்ல, பெண்ணுமல்ல; ஒர் இரும்பு உலக்கை பிறக்கும். அது உங்கள் குலம் முழுவதையும் ஒழிக்கும் என உரைத்தனர்; அவ்வாறே இரும்புலக்கையைச் சாம்பன் பெற்றான். இதை அறிந்த கண்ணபிரான் அந்த உலக்கையைத் துள்ளாக நன்றாய் ராவி நடுக்கடலிற் போட்டு விடும்படிக் கூறினர். யாதவர்கள் அப்படியே செய்தார்கள். ராவின பொடிகள் சம்பங்கோரைகளாகக் கடற் கரையிலே முளைத்தன. கடற்கரைக்கு விளையாடவந்த கோபால குமாரர்கள் தங்களுக்குள் கலாம் ஏற்பட இந்த முட் கோரைப் புல்லைப்பிடுங்கி ஒருவரை ஒருவர் குத்தி மான்டனர். ராவின பொடியில் வேப்பம் விதையளவுள்ள இருமபுத்துண்டை ஒரு மீன் விழுங்கிற்று; அந்த மீன் ஒரு வேடன் கையில் அகப்பட அந்த மீன் வயிற்றில் இருந்த இரும்புத் துண்டை அவன் தன் அம்புத் தலையிலே வைத்தான். கிருஷ்ண பிரான் யோகா சனமாக ஒரு காட்டில் பாதத்தைத் துக்கி அமர்ந்திருக்கையில் அந்தவேடன் துக்கியிருந்த பாதத்தை ஒரு செம்பருந்தாகப் பாவித்து அந்த அம்பை எய்தான். அந்த அம்பு படக் கண்ணபிரான் இறுதி கூடிப் பரமபதம் எய்தினர்.