பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/748

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 275 வலிமை, வடிவு (உருவம், அழகு), நலம் (நன்மை, குணம்) இவையெல்லாம் . இதனுள் (இந்தக்கலவிப்பித்தில்) மட்க (ஒலி மங்கும்படியாக, வலி குன்றும்படியாக) மிகுதலுற்று (அள்வு கடந்து) அதன் பயனாக, உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக, நரை பெருக, உடல் ஒரு சேர (மிகவும்) பழுத்து (முதிர்ந்து கிழமாய்) (ஈற்றில்) விழும்போது (உடல் விழும்போது இறந்து போகும் அந்த சமயத்தில்) ஒப்பற்ற பரஞ்சோதியாம் பேரின்ப வீட்டில் (நான்) புகுந்து ஒய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து (உனது) திருவுள்ளம் நினையாதோ! செகுதகெண, கெணசெகுத ... டிட்டிட்டி, டிட்டிமிட டி.டி திதோ திரிகடக கடகதிரி. தத்தித்தி குத்ரிகுடததிதிதோ தகுடதிகு திகுடதிமி. றிற்றித்த றிற்றிரிரி என்னும் ஒலி பெருகி நீள. தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும், இரண்டு பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்தவளும், உடனிருந்த வ ான துர்க்கையும் உள்ளம் அஞ்சித் திகைப்பு அடையவும், 蠶 வாய்ந்த தணிகைமலையில் மயில் மீது நடன நிலையில் நிற்கவல்ல (நடனம் செய்கின்ற) பெருமாளே! (பரம ஒளியிற் புக்கிருக்க எனை நினையாதோ) 309 கப்பல்கள் செல்லப் பெற்ற கடலில் எங்கும் மாறுபட்டு எழும் அலைகள் எழுந்து, பெருகிச் சென்று (அதிரும்) க்கின்ற காரணத்தாலும். வஞ்சகம் கொண்ட திடம் (உறுதி) அமைந்த நெஞ்சத்தினனாகிய (மன்மதன்) நெருப்பு வீசிப் பொருந்த அஞ்சு அம்பு அதும் (ஐந்து மலர்ப்) பாணங்களையும் ஒருசேர விட்ட அந்தக் காரணத்தாலும் (அல்லது திட நெஞ்சின. னாய்), நெருப்பு உற, ஐந்து பாணங்களையும் செலுத்தும் (மன்) மதனாலும்.