பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/764

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 291 உள்ளப் பேறாக நின்று (உள்ளத்தில் பெறற்கரிய செல்வமாக பாக்கியப் பொருளாக நின்று), சோர்வு அடையாமல் எப்போதும் (நிலைத்துள்ள) மனோலயத்தைத் தருவதான (மனம் நசிவதான) ஒர் உபதேச மொழியைச் சொல்ல மாட்டாயா! சந்தேகப்படாதவாறு (நிச்சயமாக) ஐந்து எனப்படும் பொய்யாத வகையில் (கேட்டதைத் தரும்) கற்பக விருட்ச சோலையில் தங்கி வளர்ந்த தெய்வ மகள் தேவ யானையின் கொங்கையைச் சேர்பவனே! இரவைப் பொறாதபடி ஒலிக்கும் சொல்லை உடைய உக்ரமான சேவல் பொருந்தும் வெற்றி கொண்ட அந்தக் கொடியைக் கொண்ட பராக்ரம வேலனே! உலகம் முழுமையும் ஒடி வலம் வந்து, ஐந்து திருக்கரங் களைக் கொண்ட கணபதிக்கு (மாதுளங்கனியை அல்லது மாங்கனியைத்) தந்த தந்தை சிவபிரானுடைய உண்மைக்குப் பொருந்திய நீதி முறையைத் தெரிவித்த பெரியோனே! வள்ளிக் (கொடிகளின்) கூட்டம் நெருங்கியுள்ள வள்ளி. மலை மேலேறிச் சென்று வள்ளிவேட்டை யாடின. பெரு. மாளே! (வள்ளி நாயகியின் மீது விருப்பம் மோகம் கொண்ட பெருமாளே!) (உள்ளத்தின் மாய்வ தொன்றை மொழியாயோ) 316 (மன்மதனது) முல்லை மலர்ப்பாணத்துக்கும், மன்மதனது அழகிய கையில் உள்ள (கரும்பு) வில்லுக்கும், மாதர்களின் வசைப் பேச்சுக்கும் வாடி, இன்பத்தை அடைய முயன்று அதனால் நீண்ட முள் தைத்த கால் போல மடங்கிக் கிடந்து, (துன்பக்) கொள்ளி நெருப்பில் முழுகி (உள்ளம்) வெந்து, கீழ் நிலையில் விழுவதல்லாமல் (கீழ் நிலையில் விழுவதோடு), ஒப்பற்ற ஞான