உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - வள்ளிமலை திருப்புகழ் உரை 30? 319 ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் எனப்படும் பஞ்ச பூதங்களால் ஆயதும், கள்ளத்தனத்துக்கு இடமானதும், மாமிசமும், புழுக்களும், உள்ளதும்ான வீடு. நெருப்பு எழுவது போலப் பேச்சுக்கள் பிறக்கின்ற கோபம் என்கின்ற ஆணவம் நிறைந்த களவுத்தனமுள்ள தோலாலாய பை ஆகிய இந்த உடம்பை இனி நான் சுமக்காதபடி யுக முடிவுகளிலும் முடிவு அடையாத ஒப்பற்ற அந்த பேரின்பப் பொருளை எனது உள்ளத்தினிட்த்தே கன்டு அறியக் கூடிய அறிவு ஊறி (பேரின்பப் பொருளை ஞானக் கண்ணால் அறியும் அறிவு ஊறி யெழ) ஒளி விளங்குவ தென்றும், அருவமானதென்றும் (ரூபம் இல்லாதது என்றும்), உரு (ரூபம்) உள்ளதென்றும், வேதங் களின் முடிவில் நிற்பதாய், (என்றும் அழியாது நிற்பதாய்) உள்ள அந்தப் பொருளை யான் காண அருள் புரிவாயாக; கத்துாரியின் மணம் வீசும் நறுமணமுள்ளதும், மலர்ந்துள்ளதுமான தாமரையின் நடுவில் வீற்றிருக்கும் அல்லது தாமரை விரும்பும் அல்லது தாமரையால் விரும்பப் படும் வெள்ளை நிறத்தியாம் சர்சுவதியின் தலைவனான பிரமன் காண முடியாத நஞ்சைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த சடா பாரத்தின் மீது ஆயிர முகத்து நதிய்ான் கங்கை வெள்ளத்தை ஏற்ற தலைவருமான் சிவபிரானது செல்வரே! அடிதேடி அறிவலென அவனியெலாம் முழுதிடந்தும் முடிதேடி வருவலென மூதண்ட மிசைப் பறந்தும் காணரிய ஒருபொருளாய்க் கள ங்கமற விளங்கு பெருஞ் சோணகிரி யெனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்" i (அருணைக் கலம்பகம்) " விடதரர் . நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவர் பாடல் 286 LITГГ"}, tt வெகுமுக வெள்ளம் - கங்கை நங்கை ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்" - அப்பர் VI.1851 வெகுமுக குல்ப் பழைய உதக மகள்" வேடிச்சிகாவலன் வகுப்பு.