உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிரப்பள்ளி திருப்புகழ் உரை 329 விளக்கம் தரும் சோதியைத் தன்னிடத்தே கொண்ட நேர்மை நிறைந்த பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பெனும் படியான திருக்கை வேலைச் செலுத்தின வீரனே! திரனே! அருமை வாய்ந்த அழகுள்ள உள்ளத்தனே! (உருவத்தனே)! ஒப்பற்ற ஒருவனே! வேற்று வடிவத்தைப் பூண்டு (வேட உருவுடன்) மலையை இருப்பிடமாகக் கொண்ட வேடர்கள் வாழ்ந்த காட்டிடையே போய் (அங்கிருந்த) குற மங்கை வள்ளி மீது சை கொண்டு மோக உள்ளத்தனாய் உலவி அவள் பாதத்தின் స్ధి வீழ்ந்து வணங்கிய குமரேசனே! அறிவு நிறைந்த ஞான வேலனே! உனக்கு ஆளாக (தொண்டனாக) சீடனாக (உபதேசத்தைப் பெற்று) நின்று ழ்ந்த சிவன் தொழுகின்ற பாதனே! நாதனே! மயிலம் என்னும் குளிர்ந்த சிறந்த மலையில் வாழ்பவனே, தேவர் பெருமாளே! (உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீதாள் அருள்வாயே) திரிசிராப்பள்ளி 329 அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த கொங்கையைக் காட்டியும் மறைத்தும், சிறந்த அன்புள்ளவர் போலப் பொய் வேடத்துடன் நடித்துத் தாம் பெற்ற காசின் அளவுக்குத் தகுந்த உறவு காட்டிச் (சல்லாபம் செய்து) அம்பும் தோற்கும்படியான அவ்வளவு கூரிய கண்ணால் மயக்கியும், வஞ்சகம் நிறைந்த காம இன்ப சாத்திரங்களை எடுத்துப் பேசியும், குயில், அன்றில் பறவை போலப் புட் குரல்ைக் காட்டியும், கூர்மையான நகம் கொண்டு குறியிட்டு t இன்ப சாத்திர விளக்கத்தைக் கந்த புராணம் இந்திர புரிப் படலத்தில் " புல்லுதல் சுவைத்திடல் புணர் நகக் குறி பல்லுறல் மத்தனம் பயிலுந் தாடனம் ஒல்லொலி கரணமோ டுவகை யாதிய எல்லையில் புணர்நில்ைக் கியைந்த என்பவே" - ஆதிய (38.50) பாடல்களைப் பார்க்க # இது புட்குரல் - பாட்டு 197, பார்க்க