உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . சிராப்பள்ளி திருப்புகழ் உரை 361 சிவன், உத்தமன், அழிவிலாத உருத்திரன், முக்கண்ணன், நக்கன் (நிர்வாணி - திகம்பரன்) (அல்லது அக்கன் . எலும்பாபரணன்), (மழு ஏந்திய கரத்தன்), உக்ரமான போர்க் களத்தில் திரிபுரத்தை எரித்தருளிய ஞான குணத்தினன், குணமிலாதவன், ஆதி மூர்த்தி. செகத்துக்கு (உலகுக்கு) வித்தன் (வித்து - மூலப்பொருளா யிருப்பவன்), நிசப் பொருள் (உண்மைப் பொருளா யிருப்பவன்), அறிவுக்கு எட்டாதவன், அற்புதன், ஒப்பிலி ஆகிய சிவபிரானிடத்தே (உற்பவித்தவனே) தோன்றினவனே! தாமரைத் தடாகங்கள் உள்ள திரிசிராப்பள்ளிமலை மேல் வீற்றிருக்கும் சற் குமர (நல்ல குமரப்) பெருமாளே! (யமப் ப்ரகரத் துயர் தீராய்) 341 பொருளின்மேல் ஆசை கொண்ட காம உருவத்தினர், அன்பு உடையவர்கள் போலச் சேரும் காம லீலைக்கு இருப்பிடம் ஆனவர்கள், ஆண் பிள்ளைகளின் கூட்டத்தில் வெட்கமில்லாத் செருக்கினர்கள், கொங்கையின் மேலே புடைவை போட்டுள்ள மாயா உருவத்தினர், (தம்மிடம் வந்தவரை) வறியராக்குகின்ற (தரித்திர நிலையிற் கொண்டு வருகின்ற) பொல்லாத மூதேவிகள் - கீழ் மக்களிடத்தும் (சண்டாளரிடத்தும்) மறுக்காமல் சேர்பவர்கள், தமது நெஞ்சத்தில் வஞ்சனை (எண்ணங்கள்) எண்ண முடியாத பல கோடிக் கோடிக் கணக்காக உடையவர்கள், தந்திரத்தாற் பலர்மேல் விழுகின்ற பயனிலிகள், கலவி சாத்திர (காம சாத்திர) நூல்களையே படிப்பவர்கள், தங்களுக்கு ஆசையான _பாடல்களைப் பாடி அழைப்பதில் ஓயாத மழை போன்றவர்கள், தன்வசத்தை இழக்கச் செய்கின்ற தீமையைத் தருகின்ற நீர் (ஆவேச நீர்) கள்ளை உண்பவர்கள், இரக்கமுள்ள பார்வையே இல்லாத மகாபாவிகள் (ஆகிய பொது மகளிருடன் கூடும்) இன்பம் நல்லதா! (நல்லதல்ல என்றபடி)