உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o குன்று - திருக்கற்கு: திருப்புகழ் உரை 373 திருக்கற்குடி 345 குடத்துக்கு ஒப்பிடலாம் என்றால் குடத்தை நொறுங்க உடையச் செய்தும், யானைக்கு ஒப்பிடலாம் என்றால் யானையைக் காட்டில் துரத்தியும், மலைக்கு ஒப்பிடலாம் என்றால் மலையை அடக்கியும் (விந்தமலையை அகத்தியர் அடக்கியும், எல்லா மலைகளையும் சிறகை அறுத்து இந்திரன் அடக்கியும்), சக்கரவாகப் பட்சிகளின் கூட்டத்தின் குலத்தை ஒப்பிடலாம் என்றால் அந்தப் பறவை இனத்தை வருந்தவைத்தும், ஆடம்பரங் காட்டி அகந்தை பூண்டு, குரு தானத்திலிருந்து அறிவுரைகளை எடுத்து ஒதும் தவசிகளும் சோர்ந்து மயங்கும்படி பருத்துச் செழிப்புற்று, மிகவும் எழுச்சியுற்று வெளித் தோன்றுவதும் - ரவிக்கை யணிந்ததுவுமான கொங்கையை உடைய மாதர்களின் சேர்க்கை என்னும் கடலில் ஊடாடுதல் நீங்கி இருக்க அநுக்கிரகித்து உனது திருவடியைத் தந்தருளுக. (முன் பக்கத் தொடர்ச்சி) பறவைகளுள் சக்கரவாகப் புள்ளைக் கொங்கைக்கு உவமை கூறுவர். "வல்லுச் சக்கர வாகம் மதன் மகுடம்" உசித சூடாமணி, சக்கிரம் வைத்தப் பொற்குடம் ஒத்திட்டுத் திகழ்முலை - திருப்புகழ் 653 இந்தப் புள் இணை பிரிந்தால் வருந்தும். "சேவற் குருகொடு சக்கர வாகச் செழும் பெடைகாள் நாவற் குருமலர்ச் சாகையஞ் சேக்கையுள் நைவதெல்லாம்" - தணிகைப் புராணம் - களவு - 347. tதவர் சோரப் புடைத்து தவசிகளும் சோர்தல் - பாட்டு 158 பார்க்க