பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை சித்தமலை காமுககு கா'நமசி வாயனொடு ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் பெருமாளே. (2) 349. முத்தி பெற தத்தனா தானனத் தனதான பத்தியால் யானுனைப் பலகாலும். பற்றியே மாதிருப் புகழ்பாடி, முத்தனா மாறெனைப் - பெருவாழ் வின். முத்தியே சேர்வதற் - கருள்வாயே! உத்தமா தானசற் குணர்நேயா. ஒப்பிலா மாமணிக் கிரிவாசா, வித்தகா ஞானtசத் திநியாதா. வெற்றிவே லாயுதப் பெருமாளே. (3) 'நமசிவாயன் - சிவனது சிறப்புப் பெயர். (நம) சிவாயன் உறைவதால் தான் இரத்நகிரிக்குச் சிவாயம் எனப் பேர் போலும். "நக்கர்தம் நாமம் நமச்சிவாயவ் வென்பார் நல்லரே" சம்பந்தர் III-9-9. "நாதன் நாமம் நமச்சிவாயவே" -1II-49-1. t சத்திநி பாதமானது (பக்குவமுடைய ஆன்மாவிலே திருவருள் பதிகை) " புண்ணியபாவம் துலை யொத்த ஆன் மாக்களைத் திரோதான சத்தி நிக்கிரகமும் அதுக்கிரக சத்தி பதிதலுமாம்" சத்திநி பாதம் நாலு பிரகாரமா யிருக்கும். முதற் சத்திநி பாதமாகிய மந்தம் வாழைத் தண்டிலே நெருப்புப் பற்றினாற் போலென அறிக. இரண்டாம் சத்திநி பாதமாகிய மந்ததரம் பச்சை விறகிலே நெருப்புப் பற்றினாற் போலென அறிக. மூன்றாம் சத்திநி பாதமாகிய தீவிரம் உலர்ந்த விறகிலே நெருப்புப் பற்றினாற் போலென அறிக. நாலாம் சத்திநி பாதமாகிய தீவிரதரம் கரியிலே நெருப்புப் பற்றினாற்போலென அறிக முதற் சத்திநி பாதமாவது நமக்குப் பேறாயுள்ளதொரு கர்த்தா உண்டென்று அறிவெழுந் -- (அடுத்த பக்கம் பார்க்க)