பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/858

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 385 விராலிமலை 350 சீரானதும், ஆடம்பரமுள்ள (கம்பீரமுள்ள) நவமணிகள் பதிக்கப்பெற்ற, பெருமை பொருந்திய கிரீடங்களின் பாரம் தாங்கப்பெற்றதும், பலவகையரான தேவாதிதேவர்களெல். லாம் சேவிக்கின்றதுமான திருமுக மலர் ஆறினையும். சிறப்புற்று ஒங்கும் விரலட்சுமி விளங்கும் பன்னிரண்டு தோள்களையும், நீடித்து நின்று ரேகைகள் உள்ள வண்டுகள் சீராகம் என்கின்ற ராகத்தைப் பாடும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும். முடிவிலாத ஆசை உன் மேற்கொண்ட (அல்லது நீ கொண்டுள்ள) வேடர் மடமகள் வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்டு செலுத்தும் இந்திரனுடைய மடமகள் தேவசேனையும் பற்றுக் கோட்டின் இருப்பாக (பக்தர்களுக்கு உதவுதற்குப் பக்கத் துணைவியர்களாக) உரேது வலுப்பாகத் திலும் இடப்பாகத்திலுமாக உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும் ஆராய்ச்சியுடன் (சோதித் து) நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும் - மெய்ஞ்ஞான சொரூபமான, அழகிய கீர்த்திபெற்ற உனது திருவுருவத்தையும், மிகக் கீழ்ப்பட்ட வனான (தீயனான) நானும் நாள்தோறும் திய்ானஞ் செய்யும்படியான பேற்றைப் பெறுமாறு வேண்டு கின்றேன்; t 'ஆராயு நீதிவேல் ஆய்ந்து நீதியைச் செலுத்தும் வேல் துட்ட நிக்கிரகம் சிட்டபரிபாலனம் செய்யும் வேல்; சூரனை அடக்கி நக்கீரனைப் புரந்தது: "உடம்பிடித் தெய்வம்', 'தனிவேற் பெம்மான் கந்தனே' என்றார் கந்த புராணத்தில் (IV - 13-187; IV-5 - 212).