உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 399 354 ಟ್ಲಿ தருகின்ற வாசனை கலந்த நீரில் முழுகி, அகிலின் நறும்ணம் வீசும் புகையை ஊட்டி, விதம் விதமான கொத்து மலர்களாலாய மாலைகளை (ஒழுங்கு பெற) வைத்து, நிறைந்து பெருகும் மேகம் போன்றும், கருமணல் போன்றும், இசைப்ாடும் வண்டின் கூட்டம் போலவும், நடு இருள் போலவும், நிறமானது கறுத்து நீளமுள்ளதாய், சுருள் உள்ளதாய், நெய்ப்பு (வாசன்னத் தயிலம் தடவினதால் பள பளப்புள்ளதாய்), கருங்குரங்கின் சுருளுற்ற வளைவுள்ள (கரிய கை போன்று சுருண்டுள்ள) கூந்தலும், (அல்லது முசுமுசுக் கையின் சுருண்ட கொடி போன்ற கூந்தலும்), விளங்கும் பிறை போன் றும், வேடர்களின் வில்லைப் போன் றும், விலகிய அல்லது - இலகிய (விளக்கமுள்ள) பொட்டணிந்த நெற்றியும், திங்கள் போன்ற முகமும், நீலோற்பலமும், வண்டும், மாவடுவும், வில்லம்பும் யம்னும், பாய்ந்து வரும் கூரிய வாளும் (என நின்று) இடர் படு(க்)கவும் (இடரை உண்டாக்கவும்), யமனும், மிக்க வலிமை பொருந்திய கடு (விடமும்) போன்று, நீண்ட நேரம் வருத்துவனவாய், (பொல்லாதனவாய்) கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவம் நிறைந் துள்ளனவாய் விளங்குகின்ற, Sகண்களும், முல்லையரும்புக்கு ஒத்த பற்களும், அமுதம் போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்றும் (முன் பக்கத் தொடர்ச்சி) கூந்தலுக்கு உவமை: சூல் மேகம் . கருமையடர் கங்குல் ... சிறை வண்டினம். அறல். தேன் துளிப்ப வழிந்தொழுகுந் தகரக் குழலுக் கிணையாமே" - (உசித சூடாமணி நிகண்டு).

  1. விலகிய - விசாலமான

Sகண்ணுக்கு உவமை. வேல்வாள் ... கருங்குவளை ... மாவின் வடு கோல், கூற்று, விடம், வண்டு. விழிக் கொப் பிவையாமே." (உசித சூடாமணி)