பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/910

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கேடு திருப்புகழ் உரை 437 లితాంతాGar@ 367 அன்பாக வந்து உனது தாளைப் பணிந்து (மன், நீர், தீ, காற்று, வான் என்னும்) ஐம்பூதங்களும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல் - அன்பு மிக்கு விடம் நிறைந்த கண்கள், தாமரை மொட்டுகள் போன்ற கொங்கைகள் பூங்கொத்துக்கள் நிரம்பி வண்டுகள் விளையாடுகின்ற மகிழ்கின்ற கூந்தல், இவைகளைக் கொண்ட (பொதுமகளிரை). -- (மனத்திற்) கொண்டு நினைந்து, மன் (மிகவும்), பேது அறியாமை (அல்லது வருத்தம்) நிறைந்து, மனம் குன்றிப் போய் (சோர்வடைந்து) ஒரு வழிப்படாது அலைச்சல் உறுவேனோ! சபையில் நடனம் புரியும் சிவபிரான் கூத்தப்பிரான்) தந்த குமரனே! மிக்க வாசனை நிறைந்த கடப்ப மலரை அணிபவனே! வந்து பணிந்து நின்ற (அடியார்களுடைய) பிறப்புக்களை (அல்லது பாவங்களைத்) தொலைக்கும் கூரிய வேலனே! செல்லும் இடங்களில் (போகும் இடங்களில்) கந்தா என்று நான் அழைக்கும்பொழுது, செவ்விய சேவலை ஏந்தி (அடியேன் முன்) வரவேணும். செந்நெற் பயிரும் (செந்நெல்லும்) தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் பெருமாளே! (மலைந்து அலைவேனோ!)