பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . செங்கேடு திருப்புகழ் உரை 439 368 பந்து விளையாடி அழகிய கை நொந்துள்ள (மாதர்கள்) ஆசை வைத்து பசுமை வாய்ந்த (புதிய) பூமாலையை அணிந்த கூந்தல் மேலும் - பண்பு (செய்கை அல்லது அழகு) நிறைந்த வண்டுகள் பண் (இசை) பாடுகின்ற தாமரைபோன்ற முகத்தின் மீதும் . மந்தாரம் என்கின்ற தெய்வ விருட்சத்தின், வாசனையைக் கொண்ட சந்தனம், முத்துமாலை இவை சேர்ந்தனவாய், கொடிய பாதகங்களுக்கு இடம் தரும் கொங்கைகளின் மீதும் . மூண்டு நிரம்பி எழும் ஆசையைப் பூண்டு, விண்டு ஆவி (ஆ.வி. உயிர் பிரிவது போல) நைதல் உற்று (வருந்தி) விளக்கம் குறையாமல் (சோர்வு அடையாமல்) உன்னுடைய திருவருளைத் தந்தருளுக . கந்தனே! அரன் (சிவன்) மைந்தனே! விளங்குபவரும் கன்றுதல் (முதிர்தல், கோபித்தல்) இல்லாதவருமான முகுந்தன் (அல்லது, கன்று + ஆ கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் ஆன பிரியமுள்ள முகுந்தன்) மருகோனே! கன்றா (கன்றி - கோபித்து), விலங்கல் (மலை) ஒன்றை கிரவுஞ்சத்தை ஆறு கண்ட (வழி திறக்கச் செய்த, (தொளைத்த) கண்டா) வீரனே! தேவ மகளாம் தேவ சேனையின் மணவாளனே; செவ்விய பூந்தாது நிரம்பிய பூங்கொத்துக்கள் நிறைய. வுள்ள கடப்ப மாலையைத் திண்ணிய தோள் நிரம்ப அணிபவனே! திண்ணிய (வலிய) குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே ! (ஆவி நைந்து மங்காமலுன் றன் அருள்தாராய்) iS S S S S S S S S S ==== --------------- -- -- - - -