உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கோடு திருப்புகழ் உரை 455 நிறைந்த பொன் சரிகையிட்ட முன்தானை அமைந்த பட்டுப் புடவை சூழ்ந்துள்ள கால்களில், பாதத்திற் சிலம்பு ஒலமிட (ஒலிக்க), நடந்து, ஆன நடை கூடிய நடையானது உயர்ந்த வமிசத்து அன்னம் எனவும், அழகிய மார்பராய், அழகிய மயில் எனவும், எழுந்து தோன்றுபவராம் அழகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த கலவி (சேர்க்கையில்) தாவுதலைக் கொண்டு (பாய்தலைக் கொண்டு), கலிய (துன்பத்தைத் தருவதான) நோய்களை அடைந்து, பிறவி (பல) அடைந்து, ஆழ்ந்து விழும் அடியேனிடத்தில் நிரம்பிவரும் வினை பயந்து நீங்க மாலைக் கடம்பு (கடம்பு மாலை) அசைகின்ற கழல் அணிந்த பாத செந்தாமரைகளை விரும்பி, அந்தப் பெரிய பாதையாம் நெறியில் (திருவடியை விரும்பும் நெறியில்) ஆழ்ந்து பொருந்தி, அடுத்து வரும் தாகங்களை (ஆசைகளை) ஒழித்து, (அருள்) அமுத வெள்ளத்தைப் பருகி, பசியும் தாகமும் நீங்க, பவளம் போல நிறமும், ஒளிகொண்ட உருவமும் பொருந்த, சோதி முருகா எனக் கூறும் ஆசை (ஒன்றையே) கொண்டு மன அமைதியுடன் இருந்து ஒத, பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்தருளுக. திரிசூலத்தை ஏந்தினவள், எனது தாய், கவுரி, ஆசையை அறுப்பவள், 'குழையும் தோடும் பூண்டு விளையாடும் சிவகாம சுந்தரி, நல்ல விபூதியை அணிந்து ஆள்பவள், திகம்பரி, அழகிய காளி, கலைமகள் (சரசுவதியும்), செந்தாமரையில் வீற்றிருக்கும் மாது (இலக்குமியும்) - ஆக இருவரும் நின்று துதிக்கின்ற பரிசுத்தமான அம்பா (தாய்), கழை 'மூங்கில்) போன்ற தோளை உடையவள் (வேயுறு தோளி) ஆகிய பார்வதியைப் பங்கில் உடையவராய், கிருபை (திருவருள்) நிறைந்தவராய் உள்ள பரமசிவன து குழந்தை என்றே பெரிய உலகத்தோர் புகழும் விசித்திர வள்ள்லே!

  • குழை காதில் தோடு கொண்டாடு - தோட்டையணிந்து ஆடும். * கரும்பு போன்ற தோளியுமாம். வேயுறு தோளி பங்கன் . தேவாரம் (சம்பந்தர்)