உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/943

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர் பேசி யாசை கொடுத்தும ருட்டிகள் ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் பலருடே, மாலை யோதிவி ரித்துமு டிப்பவர் சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் உறவாலே. மாயை யூடுவி ழுத்திய முத்திகள் காம் போகவி னைக்குளு னைப்பணி வாழ்வி லாமல்ம லச்சனனத்தினி லுழல்வேனோ, மேலை வானொரு ரைத்"தச ரற்கொரு பால னாகியு தித்தொர்மு நிக்கொரு வேள்வி காவல்ந டத்திtய கற்குரு அடியாலே மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின் மாது தோள்தழு விப்பதி புக்கிட வேறு தாயட விக்குள் விடுத்தபி னவனோடே, ஞால மாதொடு புக்கவ னத்தினில் வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவண னைச்செகு வித்தவன் மருகோனே. "தசரதற்கொரு எண்பது தசரற்கொரு எனத் திரிந்தது. வானோர் புகழும் தசரதன். தேவர்களின் வேண்டு கோளால், கைகேசி தேர் நடத்தச் சென்று சம்பரன் என்னும் அசுரனைக் கொன்ற கிர்த்தியைக் கொண்டவர் தசரதர். t அ கற்கு - உரு - அடியாலே - மேவி (அகலிகையாகிய) அந்தக் கல்லைத் திருவடியினால் (மிதித்துப் பழைய) உருவெய்தும் படிச் செய்து கல் உரு எய்திய வரலாறு:- கெளதம முநிவரின் மனைவி அகலிகையைக் கூட எண் ணின. இந்திரன், அவர் இல்லாத சமயத்தில் அவர் உருவத்தோடு அவளைச் சேர, முநிவர் அதை அறிந்து இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறி சேரவும், அகலிகை கல்லாமாறும் சபித்தனர். அகலிகை வேண்ட, பூரீராம பிரானது காலின் துாசிபட உன் சாபம் நீங்கும் என ஒதினர் முநிவர். அiராம பிரான் மிதிலைக்குச் செல்லும் போது அவருடைய 'கழல் துகள்' பட்ட மாத்திரத்திற் கல்லாய்க் கிடந்த அகலிகை பெண்ணுருவை அடைந்தனள். (அடுத்த பக்கம் பார்க்க)