உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/958

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - செங்கேடு திருப்புகழ் உரை 485 (உன்னை) ஒதுதலைக் கொண்டு, நல்ல சித்தியானது கை கூடுதற்கு அன்புடன் (அடியேனுக்கு), உன்னைத் துதிக்கும்) சொற்கள் (என் நெஞ்சில்) தோன்றுமாறு கற்பித்து அச்சொற்களை உனது திருவடிக்கே நான் ஒப்பிக்குமாறு (அடி யேனுக்கு) உனது வீரக் கழலைத் தந்தருளுக. (பசிக்கு இரையில்லையே என்று) அருவருப்புடன், கொட்டுக் கொட்டென்னும் (பசியால்) (துக்கம் - அச்சம்) வருத்தமும் திகிலும் கொண்டு குக்குக் குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக (தீனிக்காக) விலாப்புறத்துப் பக்கங்களிற் படும்படி (சிறகை) அடித்துக், குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைத் தரித்தவனே! என்றும் உள்ளவராய், அறிவுருவானவராய், பழையராய், ஞானியாய், (பட்ச) அன்பு வாய்ந்த அத்தர்க்கு (தந்தையாம் சிவனுக்கு), ஒப்பித்த அட்சத்துச் சத்தத்தை (அட்ச (ர)த்து சத்தத்தை) ஒப்பித்த எழுத்துக்களின் ஒலியைச் சமர்ப்பித்த (தேவாரப் பாடல்களைப் பாடிச் சமர்ப்பித்த) வல்லமை வாய்ந்த சீகாழிப்பதிச் செல்வனே! (திருஞானசம்பந்தப் பெருமானே)! (அல்லது தந்தையாம் சிவனுக்கு ஒம் என்னும் எழுத்தின் சத்து அதை (சத்ததை) - சத்தான பொருளை ஒப்பித்த (உபதேசித்த சத்தி வாய்ந்த சீகாழிப் பதிச் செல்வனே) அல்லது அட்ச (ய)த்து சத்து அதை அழிவிலாத சத்தான பிரணவப் பொருளை உபதேசித்தவனே! தட்சண)ம் பற்றுவதும் (உடனே பற்றிக்கொள்வதும்) கருவிற் செலுத்துவதுமான பற்றை (மூவாசைகளை)ச் செற்றிட்ட (தடுத்து ஒழித்த) உச்ச (மேலோனே) அல்லது தடுத்து ஒழித்த பெருமாளே! உச்சம் (உயர்ந்துள்ள) நாகமலை என்கிற திருச்செங்கோட்டில் அழகிய பெருமாளே! (கொற்றக் கழல் தாராய்)