உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/967

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை

'கல்லுருக வேயின்கண் அல்லல்படு (கோவம்பு கல்வருக வேநின்று #குழலுTதுங். கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா! கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுண மேசென்று கொள்ளைகொளு மாரன்கை யலராலே. கொய்து Sதழை யேகொண்டு செல்லு மழ வாகந்த கொல்லிமலை மேனின்ற பெருமாளே, (2) இசைக்குக் கல்லும் உருகும் - என்பதற்குச் சான்று அகத்திய முநிவர் யாழ் வாசிக்கப் பொதியமலை உருகினது; இவ்வரலாறு பின்வருமாறு:- இராவணன் அகத்தியருடைய இருக்கையான பொதிய மலையிற் புக்க போது, அவனைப் பிணித்துத் தமிழகத்தை விட்டு அகற்றும் பொருட்டு, கந்தருவ கானத்தைத் தம் யாழ் கொண்டு அகத்தியர் வாசிக்க, அந்த இசைக்குப் பொதிய மலை உருகி இராவணனைத் தன்னுள் சிக்க வைத்தது. பின்னர் இராவணன் வேண்ட அகத்தியர் அவனை விடுவித்தனர்; இவ்வரலாற்றை " இனிய பைந்தமிழின் பொதிய மால் வரைபோல் இசைக்கு உருகாது" - சோன சைலமாலை 26ஆம் பாட்டிலும், மதுரைக் காஞ்சி 40 - 42 - மகாமகோபாத்தியாயர் உரைக்குறிப்பிலும் காணலாம். (பத்துப் பாட்டு 3 - ஆம் பதிப்பு - பக்கம் 342, 343) t கோ அம் புகல் வருக - பசுக்கள் அழகிய புகுமிடம் வந்துசேர.

  1. குழலூதும் கையின் மிசை ஏறு உம்பன் - விட்டுணுவாகிய இடபவாகனத்தை யுடைய பரமசிவன். திரிபுரத்தை எரிக்கச் சிவபிரான் தேரின் மீது ஏறின போது தேர் நெளிந்து பூமியில் அழுந்தியது; அப்போது திருமால் இடபமாகி இறைவன் கொடுத்த வலிமையால் தேரை முன்போல நிறுத்தினார். பின்னர், திருமால் இறைவனை வேண்டி அவரை எந்நாளும் சுமக்க மழவிடையாகவும், மாறாத பத்தியாளனாகவும் இருக்க வரம் பெற்றனர். ■

(அடுத்த பக்கம் பார்க்க)