உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/969

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை ராசகெம்பீர வளநாட்டு மலை ராசகெம்பீரன் மலை என்பது திருக்கற்குடிக்குப் பெயர். (திருப்புகழ் பாடல் 345-346 பார்க்க) 100 ஆம் பாடலில் ராசகெம்பீர நாடென்றதைக் காண்க. ராசகெம்பீர வளநாடு சோழ நாட்டின் ஒரு பகுதி - தக்கயாகப்பரணி - பக்கம் 247, 381.) 390. பரமார்த்த தரிசனை பெற தானனந் தானதன தாத்த தனதன தானனந் தானதன தாத்த தனதன தானனந் தானதன தாத்த தனதன தந்ததான tமாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு

  1. போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு மாணவண் டேறுகணை தோற்ற விழிகொடு

கண்டுபோல. மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு சோலைசென் று.ாதுகுயில் தோற்ற இசைகொடு வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு S மன்றுளாடி, சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு போகபண் டாரபணி தோற்ற அரைகொடு தேனு.குஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு வந்துகாசு. ராசகெம்பீரன் மலை திருக்கற்குடி என்று பிரமயூரீ வித்வான் கி. வா. ஜகந்நாதையர் அன்புடன் தெரிவித்தார். திருக்கற்குடி சாசனம் XV 1455 AD கல்வெட்டு ஒன்று பின் வருமாறு தொடங்குகின்றது: 'தென்கரை இராஜ கெம்பீர வளநாடு கற்பிரமதேயத்து உய்யக்கொண்டான் திருமலை நயினார் திருக்கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர்" t முதல் மூன்று அடிகள் கேசம் முதல் தொடைவரையும் வர்ணனை. (அடுத்த பக்கம் பார்க்க)