உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/971

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தேடுகின் றாரொடுமெய் துார்த்த னெனவுற வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு 'சிவனொன் றாணபர மார்த்த தெரிசனை வந்துதாராய்; tவேகமுண் டாகியுமை சாற்று மளவினில் மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை வீரனென் பானொருப ராக்ர னெனவர அன்றுசோமன் -

  • சிவன் சிவச்சொருபம் என தேறி" - என வருவதைக் காண்க (பாடல் 239).

t வேகம் . கோபம் " ஒவா வேகமோ டுருத்துத் தன்மேற் சென்ற சே" கலித்தொகை - முல்லை - 3. இந்தப் பாட்டின் 5,6,7 அடிகள் தக்கயாக தண்டனைகளை விளக்குகின்றன. தன் மருமகனான சிவபிரான் தன்னை மதிக்கவில்லை என்று கோபங்கொண்டு தக்கன் சிவபிரானை ஒதுக்கிவைத்து ஒரு யாகம் செய்யத் தொடங்கினான். அந்த யாகத்தைப் பார்க்க விரும்பி வந்த தக்கன் மகள் (சிவபிரான் மனைவி) தக்கனாற் புறக்கணிக்கப்பட்டாள் உமாதேவி தன் தந்தை (தக்கன்) மீது கோபங்கொண்டு இந்த யாகத்தை அழித்தருளுக எனச் சிவபிரானை வேண்ட, அவரது கோபத் தீயினின்றும் " வீரபத்திரர்" தோன்றினர். தேவியின் கோபத் தீயினின்றும் "காளி" தோன்றினள். சிவனது ஆணையின்படி வீரபத்திரரும் காளியும் தக்கனது யாக சாலைக்குப்ப்ோய்ச் சிவனை நிந்தித்த தக்கனை வெட்டி வீழ்த்தினார்கள். வீரபத்திரர் அங்கு இருந்த பல தேவர்களுக்கும் பலவித தண்டனைகளை அளித்தார். சந்திரனைக் காலால் தேய்த்தார்; ஒரு சூரியனுடைய பற்களை உடைத்தெறிந்தார்; பிறிதொரு சூரியனுடைய கண்ணைப் பிடுங்கிவிட்டார் அக்கினியின் கையைத் துண்டம் ஆக்கினார். சரச்வதியின் மூக்கை அறுத்தார்; சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன்னியங்கு பருதியான் பல்லும் இறுத்தவர்க் கருளும் பரமனார்" (சம்பந்தர் - III - 118 - 5) (அடுத்த பக்கம் பார்க்க) 31