பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/975

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை சாயவெகு மாய தூளியுற வாக தாடியிடுவோர்க ளுறவாமோ, tவேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூச லென:ஏ.கி. வீறசுரர் பாறி வீழஅலை யேழு வேலையள றாக விடும்வேலா, - நாதரிட மேவு மாதுசிவ காமி நாரியபி ராமி யருள்பாலா; நாரண சுவாமி யீனுமக ளோடு ஞானமலை மேவு பெருமாளே. (1) 392. திருவடி தீட்சை பெற தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதான மனையவள் நகைக்க ஆரி னனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும். மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும் வசைமொழி பிதற்றி நாளு மடியேனை அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி னகமதை யெடுத்த சேம மிதுவோவென்; ’ ஆக தாடியிடுவோர் - சரீரத்தைத் தட்டிக் கொடுப்போர். t போர் நிகழ்வதாயிருந்தால், நாட்டில் வாழும் அந்தணர், பெண்டிர், பிணியுழந்தோர், ஆனினங்கள் இவைகட்குத் தீமை உண்டாகாதவாறு, போர் நடக்கப்போகின்றது; பாதுகாவலான இடத்தை அடைவீராக’ என முன் எச்சரிக்கை செய்யும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது;

  1. ஏகி ஏகுவித்து. (அடுத்த பக்கம் பார்க்க)