பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாகேச்சுரம்) திருப்புகழ் உரை 565 இச்சித்தல்) கூடாது என்னும் நல்லறிவு இல்லாமல் (பொசித்த) அனுபவித்த துஷ்ட்ர்கள், பலவித தந்திரச் செயல்களைச் செய்த வரலாற்றை உடைய துஷடர்கள், (ஆவேச நீரை)க் கள்ளைக் குடித்த துஷ்டர்கள். (தமியோர்) திக்கற்றவர்களின் (சொம்) சொத்தைக். கூச்சப்படாமல் தமக்குச் சேரும்படி பிடுங்கின துஷடர்கள், ஊரார்களுடைய (எல்லாருடைய) ஆசைகளையும் (தாமே கொண்டு) அறிவின்றிக் குழறும் துஷடர்கள், கோலால) கோலாகல - ஆடம்பரத்துடன் வாள் போரிலும் விற்போரிலும் அகந்தை பூண்டு (தீயன செய்யும்) துஷடர்கள் - குருவின் சேவை கிடைக்கப்பெறாத (பாவத் து அவத்த) பாவமும் கேடும் கொண்ட துஷடர்கள், ஒருவருக்கும் கொடுக்காமல் தேடித் தேடிப் (பொருளைப்) புதைத்து - மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள் ஆகிய இந்தத் துஷ்டர்கள் யாவ்ரும் (கோமாள நாயில்) கும்மாளம் போடும் நாயின் இழிவான பிறப்பை அடைந்து அதில் அலைச்சல் உறுவார்கள். வீசிப் பெரிய (மலையை எடுத்து) மலைபோன்ற அலைகளை எடுத்து எறிகின்ற மிக்க ஒலியைப் பெருக்கும் கடலில் (பகைவன் - சூரன்) திரும்பமுடியாத வகையில் gPL4– (அவனைத்) துரத்திப், பயம்கொண்ட அந்த ஒப்பற்ற மாமரமாம் சூரனை வேருடன் விழும்படியாக வெட்டிக் குவித்த போரினைச் செய்ய திறமை வாய்ந்ததும் (உனது) திருக்கையில் உள்ளதுமான வேலாயுதனே! மெய்ம்மையே வாய்ந்த (உனது) திருப்புகழை (யான் ஓதி நீ) பெறவைத்த வயலூரனே! (நாசம்) கேடு முதலிய தியன பயக்கும் (பிராரத்த துக்கம்) இம்மையில் அனுபவிக்கவேண்டிய பழவினையால் வரும் துக்கம் மிக்கவர்களுடைய மாயை சம்பந்தமாய்க் கவலையைத் தரும் மயக்கத்தை ஒழித்தருளும் ஞான உபதேசம் செய்த கீர்த்தியைக் கொண்ட சற்குரு வடிவமான