பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை முக்கட்பொற் பாளரு சாவிய "அர்த்தக்குப் போதக மானது முத்திக்குக் காரண மானது பெறலாகா. முட்டர்க்கெட் டாதது நான்மறை யெட்டிற்றெட் டாதென வேவரு முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே செக்கட்சக் ராயுத மாதுலன், மெச்சப்புற் போதுப டாவிய திக்குப்பொற் பூதர மேமுதல் வெகுரூபம் சிட்டித்துப் பூதப சாசுகள் கைக்கொட்டிட் டாடம கோததி செற்றுக்ரச் சூரனை மார்பக முதுசோரி கக்கக்கைத் தாமரை வேல்விடு செச்சைக்கர்ப் பூரபு யாசல கச்சுற்றப் பாரப யோதர முலையாள்முன் கற்புத்தப் பார்துல கேழையு மொக்கப்பெற் றாள்விளை யாடிய #கச்சிக்கச் சாலையில் மேவிய பெருமாளே (39) 'அர்த்தக்கு-அர்த்தத்துக்கு. 1 உலகேழையும் பெற்றது. பாடல் 156 கீழ்க் குறிப்பைப் பார்க்க 1.கச்சிக் கச்சாலை என்பது காஞ்சியில் கச்சபேசர் திருக்கோயில் இது பெரிய காஞ்சீபுரத்தில் உள்ளது. திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்த்ரமலை அழுந்த அதைத் திருமால் ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். பின்னர் அவர் இறுமாப்படைந்து கடலைக் கலக்க, சிவபிரானது ஏவலால் விநாயகர் அந்த ஆமையைக் கொன்று அதன் ஒட்டைச் சிவபிரான் அணியத் தந்தனர். அதன் பின் திருமால் தமது குற்றம் திரப் பூசித்த சோதி லிங்கமே கச்சபேசர். திருப்புகழ்-விநா பாடல்-5 பக்கம் 14 கீழ்க்குறிப்புப் பார்க்க