பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 491. விலைமாதர் சேர்க்கையற தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த தனதான முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர் முற்செ மத்து மூர்க்கர் வெகுபாவர் முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கள்ை tமுச்சர் மெத்த சூட்சர் நகையாலே, எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட #காக்கர் இட்ட முற்ற கூட்டர் விலைமாதர் Xஎக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண் இப்ப டிக்கு மார்க்கம் உழல்வேனோ, தித்தி மித்தி மீத்த ணத்தனத்த மூட்டு சிற்று டுக்கை சேட்டை தவில்பேரி, திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள் செக்க டற்கு ளாழ்த்து விடும்வேலா, Oகற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா. *செமத்து - சென்மத்து, செமித்தெத்தனை" திருப்புகழ் 266. சமம்' செமம்' என வந்ததென்றால், சமம் - போர், சண்டை செய்வதில் முற்படுகின்ற மூர்க்கர். 1 முச்சர் - முஞ்சர் முஞ்சர் மனைவாசல் திருப்புகழ் 41. # காக்கர் - காக்கன் போக்கன்' - என்னும் உலக வழக்கிற்போல. Xஎக்கர் எக்கராம் அமண்கையர் - சம்பந்தர் - III.39.11. O திரிபுரத்தை அழித்தபோது இறைவர் நடனம் செய்தார். இந்த ஆடல்கள் கொடுகொட்டி, பாண்டரங்கம் எனப்படும். சிட்டமார்ந்த மும்மதிலும். சுட்டு மாட்டி - நட்டமாடு நம்பெருமான்-49-8 (சம்பந்தர்). திரிபுரம் எரியத் தேவர் கொண்ட. ஆடிய கொடுகொட்டி ஆடலும்" தேர்முன் நின்ற திசைமுகன் காண, ஆடிய வியன் பாண்டரங்கமும்" -சிலப்பதிகாரம் 6.(40-45). "நீறணிந்து பாண்டரங்கம் ஆடுங்கால்" - (கலித்தொகை கடவுள் வாழ்த்து) இறைவன் வெண்ணிற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்து".(சிலப்பதி உரை - 6.45) என வருவனவற்றுக்கு ஏற்ப " நட்டமிட்ட நீற்றர்' என்றார்.