பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலுர்) திருப்புகழ் உரை 681 ஆசைமனையாட்டி, (பரம்பரை) முழுமுதல் தேவி, அம்பிகை, முதல்வி, மலைமகள், (மங்கலை என்றும் சுமங்கலியா யிருப்பவள், (பிங்கலை) பொன்னிறம் படைத்தவள், காட்டில் நடனத்தில் பிரியங்கொண்டவள் - செம்மையான இலக்குமி, (அயன்மாது) சரஸ்வதி, மன்மதன் மனைவி ரதி, (வசிட்டர் மனைவி) அருந்ததி, (இந்திரன் தேவி) இந்திராணி, முதலிய தேவதைகள் வணங்கும் முக்கண்ணி, - மேகநிறங்கொண்ட திருமாலின் (பின் வந்தவள்) தங்கை - ஆகிய பார்வதி அருளிய இளையோனே! வேலையும் மயிலையும் நினைக்கின்ற அடியார்களுடைய துன்பம் திரும்படியாக அருள்பாலிக்கின்ற கந்தனே! (நிரந்தர) முடிவில்லாதவனே - கடவுளே! மேலை வயலூர் என்னும் தலத்தில் (உகந்து உளம்) உள்ளம் உகந்து - மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே! (மருண்டிடல் ஒழிவேனோ) 921. (விகட) மிகுதியான - நிரம்ப, நறுமணம் வீசும், கஸ்தூரி, (இமசலம்) பனிநீ rr == பன்னிரை, வகிர o பங்கு கொண்ட-பன்னிர் கலந்த (படிரமும்) சந்தனமும் இவை கல்ந்துள்ள கலவையைப் பூசிக் கொண்டு, மலர் மாலையை முடித்துக்கொண்டு, தெருவின் முன்புறத்தில் உலாவி, இளைஞர்களின் பொருளுடனே அவர்களின் உயிரையும் கவர்கின்ற (கலவி விதம்) புணர்ச்சிவகைகளைக் காட்டும், (வியன்) வியக்கத்தக்க மாதர்கள் தமது மயக்கவலையில் இட்டு கட்டிப்போட்டு, வேதனைப் படும்படி (தியக்கி) மயங்கச் செய்து, அவர்களுடைய - பொருந்திய நவமணிமாலை நவரத்தினமாலை - முக(ப்)பட முன் தோன்ற எதிரில் (பொர) முட்டுகின்ற (புரணம்) நிறைவு அல்லது ஒளிகொண்டதும், புளகாங்கிதம் கொண்டதுமான இளங் கொங்கைகள் மார்பின்மீது அழுத்தம் உறப் பதியக் கழுத்திலே கைசேரக் கட்டி அழுத்தி அன்பு மிக்கெழ