பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை (ரெயில்வே ஸ்டேஷன். திரிசிராப்பள்ளிக்கு மேற்கு 45 மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது. இதுவே வஞ்சி" என்பாருமுளர்.) 927. சிவஞானம் பெற தனதானத் தனதான மதியால்வித் தகனாகி மனதாலுத் தமனாகிப், பதிவாகிச் சிவஞான பரயோகத் தருள்வாயே!

  • நிதியேநித் தியமேயென் - நினைவேநற் பொருளாயோய், t கதியேசொற் பரவேளே கருவூரிற் பெருமாளே (1)

928. பொது மாதர்களின் இணக்கம் அற தனனத் தணத்ததன தனனத் தனத்ததன தனனத் தனத்ததன தனதான இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி யிரதக் குடத்தையெணு மரபோடே. இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய இதழ்சர்க்க ரைப்பழமொ டுறழுறல்; # முளரிப்பு வொத்தமுக முகம்வைத் தருத்திநல முதிரத்து வற்பஅல்குல் மிசைமூழ்கி. (701-ஆம் பக்கத் தொடர்ச்சி) செய்து வந்தனர். அப்போது சீகாழியில் இருந்த இந்திரன் தனது சிவ பூஜைக்கு நீரில்லாது வருந்த நாரதர் கூறிய தந்திரத்தின்படி விநாயகரை அவன் பூசித்து வணங்க, அவர் எதிர் தோன்றி வேண்டிய வரம் யாதென "அகத்திய முனிவரின் கமண்டலத்திற் காவிரி நதி அடங்கியுள்ளது. அந்தக் கமண்டலத்தை நீங்கள் கவிழ்த்துவிட்டால் பரவிவரும் நதி என் நந்தவனத்துக்கு வேண்டிய நீரைத் தரும்" என விநாயகரும் அங்கனமே கவிழ்க்க, காவிரி பெருகி வந்து இந்திரனுடைய நந்தவனத்துக்கு வேண்டிய நீரைத் தந்தது என்பது வரலாறு:

  • "நிதியொப்பானை நிதியிற் கிழவனை.........

கதியொப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே அப்பர் 5.3-6. (தொடர்ச்சி 703 ஆம் பக்கம் பார்க்க