பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்) திருப்புகழ் உரை 705 பேச்சு - கிளியின் பேச்சுக்கு ஒப்பாக, கடைவிழிகள் கடைக்கண்கள் - செந்நிறம் கொள்ள படுக்கையில் முழுகிச் சுகிக்கின்ற (இன்பம் அனுபவிக்கும்) தொழில் தொலையும்படி (என்னை) ஆண்டருளுக. தாமரை போன்ற திருவடியில் உள்ள வீரக் கழலும், விளங்குகின்ற வெட்சிமாலை அணிந்த =9/LD5'LL திருப்புயங்களும், என்னுடைய (நயனத்தில்) கண்களில் இடம் பெற்று விளங்க நடனம் செய்கின்ற வேவனே! (நரனுக்கு) அருச்சுனனுக்கு அமைத்த ஏற்பட்டிருந்த (அநுமத்) கொடி பறக்கும் தேரில் (சூதன்) தேர்ப்பாகனாக ளங்கின (களவன்) திருடன் - அல்லது களாப்பழத்து நிறங்கொண்டவன், (நறை) தேன் கொண்ட் மலர்களையும் சிறந்த துளவமாலையையும் அணிந்தவன் - ஆகிய திருமாலின் மருகனே! கலவைச் சாந்து அணிந்துள்ள கொங்கையை உடையவள், இன்பகரமான காமலீலைகள் இயற்றும் குறத்தி, கமலமுக - கமலபுயம் - தாமரையன்ன முகத்தையும், தாமரையன்ன திருக்கரங்களையும் உடைய வள் ன் மணவாளனே! கடலை, (கிரெளஞ்ச) மலையை, (அவுணை) - அவுணனாம் சூரனை (இரணப்படுத்தி) புண்படுத்தி அழித்து, உயர் பெருமாளே - பேர்பெற்ற பெருமாளே! (அல்லது) உயர் - மேலான கருவூர்ப் பதிக்குள் வீற்றிருக்கின்ற பெருமாளே! (அமளி முழுகிச் சுகிக்கும் வினை அற ஆள்வாய்) 929. மாமிசமாகிய திரளால் முழுமையும் - தலை முதல் கால் அளவும் (ஒப்பனையாயே) அலங்காரமாகவே (அமையப் பெற்று) (தொடர்ச்சி) களவன் - களாப்பழத்தின் நிறம் கொண்டவன், களவம் - களா. "கணிக் களவத் திருவுருவத் தொருவனையே கழல் தொழுமா கல்லீர்களே" - பெரிய திருமொழி 11-6-4. X வள்ளியின் முகம், கரம் இரண்டும் கமலம்: திருமுகங் கமலம் ....துணைக்கரம் கமலம்' - தணிகைப் புராணம்-களவு 43. O கமலம் - இடைநிலைத் திவகம்.